web log free
May 07, 2025
kumar

kumar

சமந்தா பவர் சற்றுமுன் (10) இலங்கைக்கு வந்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகியான சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த காலப்பகுதியில், அவர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஆசன அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும், தான் களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் உள்ளதாக குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் போதிய அளவு கோதுமை மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தாலும் இன்னும் மூன்று வாரங்களில் பாண் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மாவு ஏற்றுமதியை நிறுத்தியதால் இறக்குமதியாளர்கள் கோதுமை மாவு இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவு பற்றாக்குறையால் சுமார் 300 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தற்போது துருக்கி மற்றும் டுபாயில் இருந்து இலங்கை கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாளர்கள் தருவிப்பு செய்த மாவை ஏற்றிய கப்பல்கள் இம்மாதம் 30ஆம் திகதி இலங்கையை வந்தடையும்.

ஆனால் சந்தையில் போதுமான அளவு கோதுமை மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தியாவும் மாவு ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் மாவுக்கும் 20% வரி விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே இந்தியாவில் இருந்து மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்நாட்டு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.

வடமராட்சி பகுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி சாரதியை காத்திருக்குமாறு கூறி வைத்தியசாலைக்கு செல்வது போன்று சென்றுள்ளனர்.

சில நிமிடத்தில் முச்சக்கர வண்டிக்கு திரும்பியவர்கள், மென்பானங்களை வாங்கி வந்திருந்தனர். அதில் ஒன்றை சாரதிக்கு கொடுத்து விட்டு , மற்றையவற்றை தாம் அருந்தி உள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை நகர் நோக்கி செல்லுமாறு முச்சக்கர வண்டி சாரதிக்கு கூறியுள்ளனர். நகர் நோக்கி சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற நிலையில் தாம் இதில் இறங்க போவதாக கூறி இறங்கியுள்ளனர்.

அதன் பின்னர் சாரதி அவ்விடத்திலையே முச்சக்கர வண்டிக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் அவரின் மோதிரத்தை களவாடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாக அப்பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் முச்சக்கர வண்டியில் மயங்கிய நிலையில் இருந்த சாரதியை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மயக்கம் தெளிவடைந்து பின்னரே சாரதி நடந்த சம்பவங்களை பொலிஸாருக்கு தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் வலையமைப்பு தொடர்பான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்ற அவர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றினார்.

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேற்று இரவு அறிவித்தது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது.

அதில் கொழும்பு நகரைச் சேர்ந்த வியாபாரியான முகமது பாருக் (வயது 57) என்பவர் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் சோதனைகளை முடித்து கொண்டு வெளியே வந்தார்.

விமான நிலைய வளாகத்தில் வந்தபோது முகமது பாருக் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக விமான மருத்துவ குழுவினர் விரைந்து வந்து முகமது பாருக்கை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், முகமது பாருக் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இது பற்றி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

- தினத்தந்தி 

கொழும்பு வாழைத்தோட்டம் புனித செபஸ்தியான் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த இருவர், சென். செபஸ்டியன் தெருவில் உள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைத்தோட்டத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd