web log free
April 28, 2025
kumar

kumar

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை ,கொழும்பு ஹைட் பார்கில் ஆரம்பமானது.

கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமான இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். 

‘நாட்டை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த அறவழி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக இன்று பதிவாகியுள்ளது.  

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி டொலர் டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 95 சதமாகவும் விற்பனை பெறுமதி 391 ரூபா 25 சதமாகவும் பதிவாகியுள்ளது. 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

அத்தோடு, வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் தன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

போதிய எரிபொருள் மற்றும் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்போது ஆறரை மணிநேரமாக நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு அடுத்த வாரத்திற்குள் 10 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொருத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

புதிய பிரதமர் ஒருவருடன் கடமையாற்ற தயாராகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையின் சமையல் அறையின் ஊழியர்களிடம் கூறியுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலரி மாளிகையின் சமையல் அறைக்கு நேற்று சென்ற பிரதமர், அங்கு ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் எதிர்வரும், தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ஒருவர் அலரி மாளிகைக்கு வருவார் எனக் கூறியதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

தனக்கு சேவையாற்றியது போல், புதிய பிரதமருக்கு சிறப்பாக சேவையாற்றுமாறு பிரதமர் ஊழியர்களிடம் கோரியுள்ளார்.

நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதில் எவ்வித அரசியல் மோதல்களும் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாக இணையத்தள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள போதிலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

எனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குங்கள் என பிரதமர் தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என இணைய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினரான ஈசன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில், யாசகம் செய்து தனிமனித எதிர்ப்பை வெளியிட்டிருந்த குறித்த உறுப்பினர், இன்று பசறை பிரதேச சபைக்கு எதிராக மொட்டையடித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், புண்ணாக்கையும் சமைக்கப்படாத இறைலையும் உண்டு அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உணர்த்தும் வகையிலேயே தான் மொட்டையடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு மேலும் சிலர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்தியாவுடனான உடன்படிக்கையில், அமைச்சரவைக்கு அதனை சமர்ப்பிக்கும் முன்னரே கையொப்பம் இடப்பட்ட விடயத்திற்கு அதிருப்தி வௌியிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அமெரிக்க வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் மல்வத்து பீட அனுநாயக்கரையும் அஸ்கிரிய பீட மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களின் உணவுகளுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் யாசம் பெறுவதாக எதிரக்கட்சியினர் எங்களை விமர்சிக்கிறார்கள். யாசகம் எடுத்தாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம் எனவும் தெரிவித்தார். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நாட்டுக்கு தேவையான எரிபொருள், காஸ்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை எனவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் தற்போதையப் பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிகமானது. இவற்றை தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே சரி செய்யும் எனவும் தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தானோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் நிலைக்கு நாட்டை நல்லாட்சி அரசாங்கமே தள்ளியது. நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றார்கள். அவர்கள் தின்றதை நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் எட்டு பகுதிகளுக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd