[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeவிளையாட்டு செய்திரோகித் சர்மா ஓய்வு?

ரோகித் சர்மா ஓய்வு?

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (16) நடைபெற்றது. 

போட்டியில் நாணய வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். 

கில் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ரோகித் சர்மா 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் 1 ஓட்டம், வொஷிங்டன் சுந்தர் 2 ஓட்டங்கள், அக்சர் படேல் 1 ஓட்டம் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிலைத்து விளையாடி ஓட்டங்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். 

விராட் கோலி 65 ஓட்டங்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.இதனால் 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சவாலை சமாளித்து 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்துள்ளது. 

இதனால், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக மாறியுள்ளது. 

இந்நிலையில் நாளை மறுதினம் (19) இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது இறுதிப் போட்டியுடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடர​ை கருத்தில் கொண்டு இளைய தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்திய தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இது தொடர்பில் தமது தீர்மானத்தை ரோகித் சர்மாவுக்கும் இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

எவ்வாறாயினும் ரோகித் சர்மாவின் ஓய்வு மற்றும் இறுதிப் போட்டி குறித்து எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,...

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

இலங்கையில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு

– இளைஞர்களிடமும் ஆபத்தான பரவல் 2022ஆம் ஆண்டுக்கான அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் 3,800 வாய்ப்புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3,000...

More like this

அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து...

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல்...

தங்கக் காலணி வெல்ல கடும் போட்டி

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை கைப்பற்ற...