–கடலில் மீன் பற்றாக்குறை
மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை, ஹுருல்லா உள்ளிட்ட அனைத்து வகை மீன்களின் விலையும் வேகமாக உயர்ந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தைத் தொகுதியின் தலைவர் ஜயசிறி விக்ரமாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளைப் பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மீன்பிடிப்பதால், மீன் குஞ்சுகள் அழிவதுடன், மீன் வளத்தைப் பாதுகாக்கப் பொறுப்பான நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் கடுமையான மீன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு வரும் மீன்களின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. தெற்கு கடற்பகுதியில் இருந்து கிடைக்கும் மீன் வரத்து இல்லையெனில், தற்போதைய விலைகள் மேலும் இரட்டிப்பாக உயர்ந்திருக்கும் அபாயம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீன் விலைகள் அதிகரித்துள்ளதால், சில்லறை வியாபாரிகள் கூட மீன் வாங்க வராத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சாளை அல்லது ஹுருல்லா போன்ற சாதாரண மீன் வகைகளைக் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
நேற்று (21) பெலியகொட மத்திய மீன் சந்தையில் பதிவான மொத்த விலைகள் பின்வருமாறு:
- சாளை – ஒரு கிலோ ரூ.1,200
- ஹுருல்லா – ஒரு கிலோ ரூ.1,500
- லின்னா – ஒரு கிலோ ரூ.900
- பரவ் – ஒரு கிலோ ரூ.1,000
- தலபத் – ஒரு கிலோ ரூ.2,500
- கொப்பரா – ஒரு கிலோ ரூ.3,000
- பெரிய டெல்லா – ஒரு கிலோ ரூ.2,000
- தோரா – ஒரு கிலோ ரூ.3,300 என உயர்ந்த மொத்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.



