இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 அதிகரித்து ரூ.380,000 ஆக பதிவாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ.380,000
22 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ.349,600
24 கரட் தங்கம் (1 கிராம்) – ரூ.47,500
22 கரட் தங்கம் (1 கிராம்) – ரூ.43,700
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



