இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




