ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்திருந்தாலும், இந்த மாதத்தில் அவசரமாக எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப இலங்கையின் எரிபொருள் விலைகளைத் திருத்துவது தொடர்பில் தற்போது ஆய்வு செய்து வருவதாக, கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.




