இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலில் பயணித்த 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,காணாமல்போன140 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




