Homeஉள்நாட்டு செய்திஎதிர்பார்ப்பை உயர்த்தும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்

எதிர்பார்ப்பை உயர்த்தும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்

spot_img

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையின் மூலதனச் சந்தையை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, மூலதனச் செலவினங்களுக்காக 2 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர், நாட்டைப் பொருளாதார மாற்றத்தை நோக்கி வழிநடத்துவதே அரசாங்கத்தின் அடுத்த முக்கிய இலக்காகும் என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதுடன், மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதும் அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மூலதனச் சந்தை மேம்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மேலும் தெளிவாக வெளிப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட மூலதனச் சந்தை மேம்பாடு தொடர்பான 12 முன்மொழிவுகளில் பெரும்பாலானவை குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்த முன்மொழிவுகளில் சிலவற்றை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகள் இறக்குமதிச் செலவு 13.4% குறைவு!

பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பயறு வகைகளைச் சேர்ந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 2026ஆம் ஆண்டின்...

நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

இலங்கையில் நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்லுபடியாகும் வரி...

நாளை (31) எரிபொருள் விலையில் மாற்றம்? – CPC அறிவிக்கத் தயாராகிறது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தம் நாளை (31) மேற்கொள்ளப்படவுள்ளது. உலகச் சந்தையில் மசகு...

PSTA சட்டமூலம் மூலம் தொழிற்சங்கங்களை ஒடுக்க முயற்சி

– எதிர்க்கட்சித் தலைவரிடம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து...

More like this