web log free
May 07, 2025
kumar

kumar

நீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணங்களை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று(15) அனுப்பவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் செப்டம்பர் 16-ம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்பு

விருச்சிகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் புதிய முயற்சியை பாராட்டுவார். நன்மை நடக்கும் நாள்.

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

மகரம்: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம் மிதுனம்: மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும்.உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போதுகவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தன்னம்பிக்கை தேவைப்படும் நாள்.

கடகம் கடகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கடமை உணர்வுடன் செயல்பட தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

சிம்மம் சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். கன்னி

கன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்றுநடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள். துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உங்களைமட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

"அமைச்சு பதவி கிடைத்தால் நான் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிமேல் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அமைச்சு பதவிகளிலிருந்து ஏப்ரல் மாதம் விலகியிருந்தனர். இந்நிலையில், மே மாதம் 9ஆம் திகதி மகிந்த ராஜபக்சவும், ஜூன் மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவும் முறையே பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளிலிருந்து விலகினர்.

பதவி விலகி நாட்டைவிட்டுத் தப்பியோடிய கோட்டாபய மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டபோது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த சசீந்திர ராஜபக்சவுக்கு பதவி வழங்கப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் மேலும் சிலருக்கு வழங்கப்படவுள்ளன எனவும், அதில் நாமல் ராஜபக்சவும் உள்ளடக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அமைச்சு பதவி இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, "எனக்கு எந்த அமைச்சுப் பதவி பொருத்தம் என்பதை ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நான் தீர்மானிக்க முடியாது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. எனவே, மீளவும் அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனூடாக மூவின மக்களுக்கும் மென்மேலும் சேவையாற்றுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகால யுத்தத்தை இலங்கை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில மாதங்களில் தீர்வு காணப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை இராணுவ நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடன் முகாமைத்துவ செயற்பாடாக மாத்திரமே சீனாவுக்கு பங்குகள் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

களனி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரிசப ராசி அன்பர்களே 

வாழ்க்கைத்துணை உறவினர்கள் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதக மாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தரு வார்கள். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

 

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். சூரிய பகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாய மும் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். விநாயகரை வழிபட வெற்றிகள் வசமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி அன்பர்களே!

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற் சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த் தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று (13) தீர்மானித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினங்களில் அவர்கள் பாராளுமன்றத்தின் பொது காட்சியகங்களை பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கோவிட் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக, பாராளுமன்றத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னரே நாடாளுமன்றக் குழு மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.

பிலியந்தலை மடபட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இரண்டு பிக்குகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு பிக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பிக்கு மற்றொரு பிக்குவால் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விகாரைக்கு கிடைத்த பிரிகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.

120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 40 பக்க CR புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு புத்தகம் 230 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியை 06 மாதங்களுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை திணைக்களம் ஒரு வருட காலத்திற்கு நீட்டித்துள்ளது.

தற்காலிக 06 மாத உரிமம் பெற்றவர்கள், உரிமத்தின் செல்லுபடியை நீட்டிக்க, வெரெஹராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம் அல்லது அவர்களின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd