web log free
May 07, 2025
kumar

kumar

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்த பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களை கைது செய்வதாக குறிப்பிட்டார்.

பின்னர், இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது

அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் விலை 27 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம்  தெரிவித்துள்ளது.

நேற்று (10) நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் டீசலின் விலையை 75 ரூபாவாலும் பெட்ரோலின் விலையை 50 ரூபாவாலும் லங்கா IOC அதிகரித்துள்ளது.

அதன்படி புதிய விலை விளம்பரங்கள் வருமாறு,

நாளைய தினமும் மின் தடையை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு நாளை (11) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, நாளை (11) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டரை மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிட மின்வெட்டையும் அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சட்டத்தை நீக்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முன்னெடுக்கும் பிரசாரப் பணிகளை பாராட்டும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்ய முடியாது என்பதை தாம் காண்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரிப்பதாகவும் சஜித் பிரேமதாச, சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ‘பூச்சு வேலை’ மூலம் சீர்படுத்த முடியாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சட்டம் நீக்கப்பட்டு இதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கத்திறன் வாய்ந்ததாக சமன்படுத்தும் ஒரு சட்டம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நன்கொடையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படாது என இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் (பி.டி.ஏ) 'பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பிடியாணை இன்றி கைது செய்து தேடுதல் நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி மற்றும் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட சுட்டிக்காட்டினார். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாரம்பரிய நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவியைப் பெறும் நோக்கில் அரசாங்கம் இந்தத் திருத்தங்களைச் செய்திருப்பதால் புதிய திருத்தங்கள் எந்த ஒரு விடயங்களையும் மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார் மேலும் 'இந்த திருத்தங்கள் இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வழகயிலும் பயன்னடாது என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்,' என்றும் கருத்து தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் முதலில் கொண்டு வரப்பட்ட போதிலும்இ பேச்சு சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும்இ இளைஞர்கள் இன்னமும் இச்சட்டத்தின் கீழ் மென்மையான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.

பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளதுடன் பலர் தடுப்பு காவலில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த குறைபாடுள்ள சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சில வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காகஇ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (பி.டி.ஏ.) அரசாங்கம் திருத்தம் செய்துள்ளது' என்று அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் "மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளால் ஜிஎஸ்டி 10 பலன்களை இழக்கும் நிலையும் இருப்பதாகவும் நாங்கள் உணர்கிறோம்.இத்திருத்தம் இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லஇ வெறும் நிதி உதவிக்காகவே என்று எமக்குத் தெளிவாகவே தெரிகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (பி.டி.ஏ) இந்தத் திருத்தங்கள் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எளிமையாகச் சொன்னால்இ எதுவும் மாறவில்லை; தற்போதுள்ள சட்டங்கள் மெருகூட்டப்பட்ட நிலையைத்தான் நாம் பார்க்கிறோம்.

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பி.டி.ஏ) 1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது வரை சுமார் 40 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டம் (பி.டி.ஏ) பல இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இது கொண்டுவரப்பட்டாலும், இன்று அரசியல் வாதிகளையும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் அனுமதிப்பதற்காகவும் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கும் முடக்குவதற்கும் பயன்படுத்தப்படும் நிலையை நாம் காண்கிறோம்.

இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளம் உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும் பலர் தடுப்பு காவலில் இருக்கும் போதே இறந்துள்ளனர்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

 இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.எமக்கு திருத்தங்கள் எல்லாம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் நாம் அண்மையில் ஆரம்பித்த 'கையொப்பமிடும் பிரச்சாரம்' தற்போது மிகவும் வெற்றிகரமான நிலையில் உள்ளது.

பொதுவாக வடக்குஇ கிழக்கில் மாத்திரம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் தற்போது கொழும்பு, நீர்கொழும்பு, ஹம்பந்தொட்டை மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பி.டி.ஏ) தடை செய்யும் வரை எமது போராட்டம் தொடரும் ". என்றார். 

 இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்திய கடலோர காவல் படை கப்பல் 'வஜ்ரா' ரோந்து பணியில் ஈடுபட்ட போது கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களை இன்று 10ம் தேதி காலை துாத்துக்குடி கொண்டு வருகின்றனர். மத்திய உளவுப் பிரிவு விசாரணைக்கு பிறகு துாத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் ஒப்படைக்கப்படுவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் ஶ்ரீலசுதந்சதிசரகட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வகட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.

நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரமே சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இன்று (09) நள்ளிரவு முதல் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே தடை விதிக்கப்படவுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை திங்கட்கிழமை (06) அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இதற்கான அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd