web log free
May 06, 2025
kumar

kumar

 
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோர்ச் லைட்டுடன் வருகை தந்தார். 
 
மின்வெட்டு ஏற்பட்டால் மலசலகூடத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக டோர்ச் லைட் கொண்டு வந்ததாக சபைக்கு அறிவித்தார்.
 
அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்துடன் இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல்  துவங்கியது.
 
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து... 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியினை சொல்லிருந்தேன். ஆதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி செயலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன்.

இன்றைய தினம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அதேபோன்று இங்கு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது, ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்கவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வந்த போது, மக்கள் ​​பாராளுமன்ற உறுப்பினரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றார். 

மக்கள் அவரை ஹு சத்தமிட்டு அனுப்பி வைத்தனர். 

 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்று தர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட மீனவர் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறிவருகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வினை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அவர் அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம்பெரும், குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

நாளை பெப்utup 24ம் திகதி 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஏ,பி மற்றும் சி வலயங்களுக்கு 4 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 4 மணிநேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

அழகுக்கலை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக புஷ்பிகா டி சில்வா இன்று (23) தெரியவந்துள்ளது.

புஷ்பிகா டி சில்வா சார்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு வருகை தந்த சட்டத்தரணி சஜித் பத்திரத்ன இதனைத் தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்த புஷ்பிகா டி சில்வா இன்று (23) ஆஜராக முடியாது எனத் தெரிவிக்க சட்டத்தரணி பத்திரத்ன இன்று (23) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார்.

புஷ்பிகா டி சில்வா இன்று (23) சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளதாக பத்திரத்ன பிலியந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு புஷ்பிகா டி சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக திருமதி அழகி போட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வாவும், சந்திமால் ஜயசிங்கவும் ஊடகங்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, புஷ்பிகா டி சில்வா வைத்திருந்த இலங்கை திருமதி அழகி கிரீடத்தை அகற்றுவதற்கு உலக திருமண அழகி அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி சந்திமால் ஜெயசிங்க நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கொழும்பு கோட்டையில் இன்று(23) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம், அகில இலங்கை பொது கடற்றொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd