நிலவும் காலநிலை காரணமாக இன்று (09) அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 60 காற்றின் தர பரிசோதனை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே கூறுகிறார்.
இதற்காக பல அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றார்.
சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் வளிமண்டலத்தில் நேற்று அதிக அளவு தூசி துகள்கள் பதிவாகியுள்ளன. மேலும் மண்டவுஸ் சூறாவளி காரணமாக, இந்தியாவில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் பாய்ந்தது.
எனினும், தற்போதுள்ள தூசித் துகள்கள் இன்று முதல் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 1,500 கி.மீ தொலைவில் உள்ள கொழும்பு நகரிலும் இதே நிலை காணப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால், அது நல்ல காற்றோட்டமாகவும், அதிக மதிப்புகளைக் காட்டினால், அது மாசுபட்ட காற்று நிலையாகவும் கருதப்படுகிறது.
காற்றின் தரக் குறியீட்டில் 151ஐத் தாண்டினால், அது வலுவான மோசமான காற்று மாசு நிலையாகக் கருதப்படுகிறது.
தீவின் பல முக்கிய நகரங்களில், இன்று காலை காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்தது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக கொழும்பு இருந்தது.
இதன் காற்றின் தர சுட்டெண் மதிப்பு 246 ஆகவும், இரண்டாவது காற்றின் தர சுட்டெண் மதிப்பு 237 ஆகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் பெறுமதி 229 ஆக இருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 226 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 214 ஆகவும் பதிவாகியுள்ளது.
காற்றின் தர சுட்டெண்ணின் படி, களுத்துறை மாவட்டத்தில் 186, இரத்தினபுரி 166, கேகாலை 163, பொலன்னறுவை 160, பதுளை 154 மற்றும் கண்டி 151 ஆக இருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது குறித்த கலந்துரையாடலின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்து, அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் பிரேரணையின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL)க்கான டாக்கா டொமினேட்டர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் பந்துவீச்சு ஜாம்பவான் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வெளிநாட்டு டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாய்களில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை (10) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால், பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படும்:
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்.
மஹரகம, பொரலஸ்கமுவ, மற்றும் கொலன்னாவ நகர சபை பிரதேசங்கள்
கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்
இரத்மலானை மற்றும் கட்டுபெத்த
தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 08.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.
அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தது.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்காக சபையில் பிரசன்னமாகவில்லை.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று (08) காலை 09.00 மணி நிலவரப்படி இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரித்துள்ளது.
காற்றுத் தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 என பதிவான பத்தரமுல்ல, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கு ‘மெஜந்தா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), கேகாலை (87), மற்றும் தம்புள்ளை (84) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது, NBRO வால் ‘ஊதா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இது காற்றின் தர சுட்டெண்ணில் 44 மற்றும் 43 ஐ பதிவு செய்த பின்னர், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற அளவுகள் குறித்து எச்சரிக்கிறது.
இந்தியாவில் இருந்து வரும் மாசுபட்ட காற்று, காற்றின் மூலம் இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாகவும், அதனால், இலங்கையின் வடக்கு பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது காற்றின் தரத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் NBRO தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை (07-12-2022) இலங்கை அரசாங்கத்திற்கான தனத்து ஆதரவை வெளிபாடுதினார், "நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால் இந்தியா தனது பொறுப்புகளில் இருந்து விடுபடுவது போன்றாகும்.
பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார ஆதரவு முழு நாட்டிற்கும் இருந்தது, அது எந்த இனவாத அணுகுமுறையின் அடிப்படையிலும் இல்லை என்று அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் வெளியுறவுக் கொள்கை குறித்த தனது அறிக்கை குறித்து எம்.பி.க்கள் கோரிய விளக்கங்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது நீண்ட கால நிலைப்பாட்டின்படி - முந்தைய அரசாங்கங்களும் பின்பற்றியது என்றார். - இது "இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் நலன்களை மேம்படுத்துவதற்கான மிகவும் ஆக்கபூர்வமான வழி". "இது எங்கள் அணுகுமுறையாகத் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.
இலங்கைக்கான ஆதரவு குறித்து, “தமிழ் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங்கள் ஆதரவளித்துள்ளோம்” என்றார். "நாங்கள் ஆதரவு கொடுப்பதில் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை," என்று அவர் கூறினார். "இந்த வகையான கடுமையான பொருளாதார சூழ்நிலையில் அண்டை வீட்டாருக்கு உதவ நாம் அந்த நேரத்தில் நாம் முன்னேறவில்லை என்றால், நாங்கள் எங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதாக அமையும், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம் என்றார்.
வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்புப் பொடி மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டுடன் இருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கினிகத்தேனை பஸ் நிலையத்திற்கு அருகில் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரையும் கினிகத்தேன பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை செய்த போது அவர்களிடம் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்பு பொடி மற்றும் அமோனியம் நைட்ரேட் என்பன கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரில் ஒருவரிடம் 22,650 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் 39,000 மில்லிகிராம் அமோனியம் நைட்ரேட் இருந்தது, மற்றைய நபரிடம் 86,680 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விராஜ் விதானகே மேலும் தெரிவித்தார்.