web log free
May 10, 2024
kumar

kumar

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அதேவேளை கொழும்பு 4 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இருக்கும்.

அதனால் நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் தலைமறைவாக உள்ள பிரித்தானிய இளம் பிரஜையை உடனடியாக கைது செய்து மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ள  கெல்லி ஃபேசர், தனது மீதான விசா மீறல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டவர் மற்றும் அவருக்கு இந்த நாட்டில் இருந்து உதவி செய்யும் உயர் அதிகாரிகள் பற்றிய மறைக்கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டை பெறும் வரை மிரிஹான குடிவரவு முகாமில் தடுத்து வைக்குமாறும், கறுப்புப் பட்டியலில் சேர்த்து நாடு கடத்தப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சி.என்.என். ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர் தாய்லாந்துக்கும் பயணமானார்.

முன்னாள் ஜனாதிபதியின் விஜயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித பங்கும் இல்லை எனவும், இலங்கை பிரஜை என்ற வகையில் விரும்பியவாறு பயணிக்க முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சி.என்.என்.க்கு மேலும் தெரிவித்துள்ளார். 

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஒத்துழைப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கடனட்டை காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிய தரப்பினரிடம் சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் 50,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் இவர் மீது லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரிடம்  முறைப்பாடு செய்ததன் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், சார்ஜன் 20,000 ரூபாயை பெறும்போது கைது செய்துள்ளனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர்.

இது ஜூலை 9ஆம் திகதி கலவரக்காரர்களால் ரணிலின் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இதுவரை சிரச அலைவரிசையின் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடகவியலாளர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரட்டா என்ற ரதிது சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் 5 மில்லியன் ரூபாவை வரவு வைத்த நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அவர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொகை தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டமை தொடர்பில் ரதிது சேனாரத்ன பொலிஸாரிடமும் வங்கியிலும் முறைப்பாடு செய்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளன.

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ள 16 உறுப்பினர்களின் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

30 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, எஸ். எம். சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சர் பதவிகள் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (17) இரவு முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை செயன்முறை பரீட்சை இந்த வாரத்துக்குள் நிறைவடையும். பரீட்சை பெறுபேறுகளை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்னும் சித தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறு இதுவரை வெளியிட முடியாமல் போயிருப்பதன் காரணம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த மாதம் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட அசம்பாவித நிலைமைகள் காரணமாகவே கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்க காரணமாகும். ஏனெனில் உயர்தர பரீட்சையின் சென்முறை பரீட்சைக்கு சுமார் 400 மாணவர்களுக்கு அந்த காலப்பகுதியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருந்தது. அதனால் அந்த மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வழங்கவேண்டி இருக்கி்ன்றது.

அதன் பிரகாரம் நாளை 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை செயன்முறை பரீட்சை இடம்பெறுகின்றது. அதற்கிடையில் பரீட்சை தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அத்துடன் செயன்முறை பரீட்சை பெரும்பாலும் இந்த வாரத்துடன் முடிவடையும். அதன் பிரகாரம் உயர் தர பரீட்சை பெறுபேறு எப்போது வெளியிட முடியும் என்பதை பரீட்சைகள் ஆணையாளர் இன்னும் சில தினங்களில் அறிவிப்பார்.

அதேபோன்று பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாங்கள் மாணவர் சங்கங்களுடன் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடி இருந்தோம். அவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதேநேரம் அரசாங்கமும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த மாணவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் பல்கலைக்கழங்களில் கஹபொல மற்றும் வேறு கொடுப்பனவுகளை பெறும் சுமார் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றார்கள்.

அந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்பதும் தற்போது பிரச்சினை என்பதுடன் அதனை எவ்வாறு திறைசேரி பெற்றுக்கொள்வது என்பதும் பிரச்சினையாகவே இருக்கின்றது. என்றாலும் பல்கலைக்கழக கட்டமைப்பை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்று, மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கும் அடிப்படை உரிமையை நாங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அதனை இலக்குவைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றோம். மேலும் பாடசாலை கல்வி நடவடிக்கையை 5தினங்களும் நடத்த தீர்மானிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது. இதுதொடர்பாக எந்த முறைப்பாடும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என்றாலும் நாங்கள் ஒவ்வாெரு சனிக்கிழமை நாட்களிலும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் இணையவழியில் கலந்துரையாடி, இதுதொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். போக்குவரத்து வசதி குறைவாக காணப்படும் பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதிக கிராக்கி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கவுன்டர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்