web log free
September 19, 2024
kumar

kumar

எரிசக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இணையதளம், நாடு முழுவதும் அமைந்துள்ள பெட்ரோல் நிலையங்களின் எரிபொருள் நிலைமைகள் மற்றும் அதன் திறன்கள் குறித்து தெரிவிக்க மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் குறைந்ததன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

ஆனால் இன்னும் பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது.

.

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர். 

புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். 

தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்வெட்டு காலப் பகுதி 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளுக்கு இரவு வேளையில் இன்றைய தினம் (05) 1 மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் (05) எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிக்கையில்..,

“5க்குப் பிறகு எரிவாயு விலை நிச்சயம் குறையும். பொறுப்புடன் சொல்லப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

எங்களிடம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கப்பல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அந்த ஆர்டர்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இனி ஒருபோதும் எரிவாயு வரிசை வராது" என்றார். 

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. புறக்கோட்டை வர்த்தக சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும், 330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை ரூ.150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை தமது நிறுவனம், தற்போது தயாரித்துள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விடுத்துள்ள கருத்து தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்ச திரான் அலஸ் இதனை தெரிவித்தார்.

அது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா தீவிரமான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

தனியார் பேருந்து கட்டண திருத்தம் இன்று

தனியார் பஸ் கட்டண திருத்தம் இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தனியார் பஸ் கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கட்டண திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று NTC இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரட்வு

காலிமுகத்திடலையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னர் தமது போராட்ட இடங்களை விட்டு வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுவி பயிர்களை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களின் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்களுக்கு OIC அறிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும், மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.