web log free
March 12, 2025
kumar

kumar

 


விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின்பேரில், அண்மையில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை அருகே கடலோரக் கிராமமான அக்கரைப்பேட்டையிலிருந்து சிலர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லோடுவேனை மறித்தனர்.

அப்போது லோடு வேனிலிருந்த தவுடு மூட்டைக்குக் கீழே 250 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக வந்த இரண்டு கார்களையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சேகர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை (500 கிலோ) பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு லோடு வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி.ஜவகர் கூறுகையில், ``கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் செல்போன் எண்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, கார்கள் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் சிலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீஸார் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

 

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளதாகக் கூறி தான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரை எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை விட்டு வௌியேற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் தங்களுக்கு அதனை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பிரச்சினையை தீர்க்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோருக்கு தேவையான ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.

சுபீட்சத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அப்பாற்பட்ட குழப்பமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தங்களிடம் இருந்து அமைச்சுப் பதவியை பறிந்து தாம் அரசாங்கத்தை இழந்தாலும் "நாட்டை அழிக்க முடியாது" என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

காணொளி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

 

ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் தோனியை நடிகர் விக்ரம் நேரில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

இருவரும் இணைந்து படம் நடிக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மகான்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் டொலர் பற்றாக்குறை விடயத்தை சமாளிக்க கருப்பு பணச் சந்தையின் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உதாரணங்களுடன் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யவென வடகொரியாவிற்கு கருப்பு பணம் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டை வர்த்தகர்களுடன் கலந்துரையாடி இந்த காலத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யவும் கருப்பு பணம் செலவிடப்பட்டதாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கை ஏற்கனவே பொருளாதார நிலையில் சர்வதேச நிறுவனங்களால் தரம் குறைக்கப்பட்டு வரும் வேளையில் கருப்பு பண சந்தையின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு, 

 

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் கையேடுகளை அச்சிட்டு பகிர்ந்தளித்தமை தொடர்பான வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட இருவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் 29.4 மில்லியன் ரூபா செலவில் கையேடுகளை அச்சிட்டு பகிர்ந்தளித்தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தனது பணிகளை கவனிப்பதாகவும் கூறி உள்ளார். மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா பாதிப்பு உள்ள தனது குழந்தையுடன் தொடர்பில் இருந்ததால் 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக வியாழக்கிழமை ஜஸ்டின் கூறியிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பாசிட்டிவ் என வந்துள்ளது. இதற்கு முன்பு, ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். தடுப்பூசி செலுத்துதல், முக கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒட்டாவில் கடந்த வார இறுதியில் டிரக் ஓட்டுநர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய திதி:

அமாவாசை

 

இன்றைய நட்சத்திரம்:

அருமையான

இன்றைய கரணன்:

நாகவம்

இன்றைய பக்ஷம்:

அமாவாசை

இன்றைய யோகம்:

சித்தி

இன்றைய நாள்:

செவ்வாய்

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திர உதயம் மற்றும் சந்திர அஸ்தமனம்

இன்று சூரிய உதயம்:

07:19

இன்று சூரிய அஸ்தமனம்:

18:26

ஜென்ம ராசி:

மகரம்

இந்து மாதங்கள் மற்றும் ஆண்டு

சாலிவாகன நாட்கட்டி :

1943 பல்லவ்

விக்ரம் நாட்காட்டி :

2078 ஆனந்த

மாத பௌர்ணமி :

தாய்

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:

15:40 to 17:03

எமகண்டம் :

11:29 to 12:53

குளிகை காலம் :

12:53 to 14:16

ராசி பலன்கள் - 

மேஷம்: இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்: இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6


மிதுனம்: இன்று தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்: இன்று அனைவருடைய ஒத்துழைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். யார் எவர் என்று பாராமல் அனைவருக்கும் உதவியும் புரிவீர்கள். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள்.உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது உத்தமம். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6

சிம்மம்: இன்று கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள். திருமண முயற்சிகள் கை கூடும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு அவசியம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கன்னி: இன்று வருமானம் திருப்திகரமாக இருக்கும். கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடித்து அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

துலாம்: இன்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பழமையான கோயில் ஒன்றுக்குச் சென்று வருவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு யோகமான நாள். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9

விருச்சிகம்: இன்று ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உடல் நலனில் சற்று கவனம் தேவை. கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை பிரயோகிக்க வேண்டாம். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

தனுசு: இன்று தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது உத்தமம். முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3

மகரம்: இன்று சிலருக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடி வரலாம். வாய்ப்புகள் வரும் போது இறைவனை வேண்டி தொடங்குங்கள். எதையும் தள்ளிப் போட வேண்டாம். சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கும்பம்: இன்று அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக சிறு தொகை செலவிட நேரலாம். அவரின் தேவையைக் கருதி பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6

மீனம்: இன்று புதிய வேலைக்கு விண்ணப்பிபவர்கள் நல்ல முறையில் செய்யலாம். நிலுவையிலுள்ள முதலீடுகள் கைக்கு கிடைக்க அலைய நேரலாம். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகை மாவட்டத்தைத் சேர்த்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே,சில வாரங்களுக்கு முன்னதாக 40 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.இதனைத் தொடர்ந்து.அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்கள்.

அதே சமயம்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், மத்திய அரசுக்கு கடிதம் மூலம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,082 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு பெண்களும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் உள்ளடங்குவர்.

பாகிஸ்தான் சியால்கோட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 79 சந்தேக நபர்களின் விளக்கமறியலை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (ATC) திங்களன்று நீட்டித்துள்ளது.

குஜ்ரன்வாலாவில் உள்ள ஏடிசி வளாகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களை பிப்ரவரி 14 ஆம் திகதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd