web log free
September 02, 2025
kumar

kumar

பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
 
சம்பவத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் போராட்டத்தில் காயமடைந்தனர்.
 
மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில், பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட எம்.பியான இவர், வெல்லவாயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது முட்டைவீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர்.

இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரிஹான பெங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயில் வீதியை மறித்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட 54 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும்.

இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன.

இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன.
 
 
 

நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று இருந்தமை தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அரபு வசந்தம் ஏற்பட வேண்டும் என்று போராட்டத்திற்கு அவர்கள் தலைமை தாங்கினர்.

குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களைத் தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அநாமதேயமாக திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என 35 பேர் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டிற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வீட்டிற்க்கு முன்பாக மக்கள் திரண்டதால் அதனை சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்திற்க்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை மற்றும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மிரிஹான பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூபிலி தபால் நிலையத்தில் இருந்து மஹரகம வரையான வீதியூடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அப்பகுதியில் தற்போது பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd