web log free
May 12, 2025
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளதுடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியிடப்படவில்லை.

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் எட்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை என நீண்ட காலமாக கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டு வந்த முறைப்பாடு அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இது வரை அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது ஒரு மாணவருக்கு ஒரு நாள் உணவுக்கு நூற்று அறுபது ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடையாக இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் இருப்பின், தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு செய்துகொள்ள முடியும் எனவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் எவ்வித தடைகளும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இன்று காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது இருந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தன்னால் முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் உள்ள பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

தென்னிலங்கையில் உள்ள பிரதான போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று அறிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமானதாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், பெருந்தோட்ட சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு விசேட நடைமுறையொன்று தேவை எனவும், பொலிஸ் மா அதிபர் தொடர்பான நிலைமையை ஜனாதிபதியால் தீர்க்க முடியாது எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகரும் அரசியலமைப்பு பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd