web log free
December 17, 2025
kumar

kumar

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று முன்னாள் அமைச்சர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சுமார் 30 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நுவரெலியா பகுதியில் கெஹல்பத்தர பத்மே நடத்தும் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தையும் போலீசார் சோதனை செய்துள்ளனர். கூடுதலாக, ஒப்பந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து மேலும் பல விவரங்களை வெளிப்படுத்த காவல்துறை நம்புகிறது.

 

 

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்து சஜித் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்“ என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு எந்த ஒரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்ல - வெல்லவாய வீதியில் நடந்த பயங்கர பேருந்து விபத்து தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப்பில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகபொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஜீப்பின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல வெல்லவாய வீதியில் கோர விபத்து எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து நடவடிக்கை.குறித்த இடத்திற்கு வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என பொலலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும்.

அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு உண்மையானக் தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் குறித்து பிரதமருக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குப் பதிலாக மில்லியன் கணக்கான ரூபாய்களில் வருமானத்தைக் குறிப்பிட்டதன் மூலம் இந்த நெருக்கடி உருவாக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் 7 ​​ஆண்டுகளாகப் பெற்ற வருமானம் ரூ. 342 பில்லியன் அல்ல, ரூ. 342 மில்லியன் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.

இந்த செயற்கைக்கோள் இந்த நோக்கத்திற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்தி ஏவப்பட்டதாகவும், அதற்கான டெண்டரை அழைக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தன்னிச்சையாக அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

தெரண 360 திட்டத்தில் இணைந்து அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.

தற்போதைய ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றுவதால், பொது சேவையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்துகிறார்.

“இந்த நாட்டின் குடிமக்கள் கல்வி சேவையை முறையாகப் பெறவில்லை என்றால், இந்த நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறுவது கடினம். இந்த நாட்டை ஒரு மாற்றத்திற்கான சகாப்தத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கு நமக்கு இருந்தால், அந்தக் கனவின் பெரும்பகுதி கல்வி மூலம் நிறைவேற வேண்டும்.

இந்த நாட்டில் இந்த மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இதை வெறுமனே ஏற்றுக்கொள்ளாதீர்கள். சில நேரங்களில் சரியாக நான்கரை மணிக்கு வீட்டிற்குச் செல்ல முடியாது. விடுமுறை நாட்களில் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டிய பிற நாட்கள் உள்ளன.

நீங்கள் எங்காவது ஒரு கடினமான கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அவ்வளவு வசதிகள் இல்லாத அலுவலகத்தில் நீங்கள் தங்க வேண்டும். அரசியல் அதிகாரம் மட்டும் போதாது, அதற்கு ஏற்ற பொது சேவை உங்களுக்குத் தேவை.”

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்திற்கு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 405 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று இரவு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்றது. தீவு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்று ஆகும்.

SDB வங்கியானது, வியாபார அபிவிருத்தியின் ஊடாக தேசிய அபிவிருத்தியை முன்னேற்றுவதிலான அதனது தொடர்ச்சியான கவனத்துடன், அதனது தற்போதைய பெறுமதி சங்கிலி நிதியிடல் முயற்சிகளினை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவி வழங்கும் சந்தை அபிவிருத்தி வசதியுடன் (MDF) சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இம்மூலோபய பங்குடைமையானது தங்களது பெறுமதி சங்கிலிகளின் ஊடேயான சிக்கலான நிதியிடல் மற்றும் அபிவிருத்தி இடைவெளிகளை தீர்ப்பதன் வாயிலாக தென்னை, கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துகின்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/பிரதமநிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன மற்றும் MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மியம் பிராச்சா உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட தலைவர்களது முன்னிலையில் இடம்பெற்றது.

 இப்பகுடைமை குறித்து கருத்துரைக்கையில், SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், 'இலங்கையின் அபிவிருத்தி மற்றும் செழுமையை நோக்கி பங்களிக்கும் தெளிவானநோக்குடனான வங்கியாக, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரவளிப்பதற்கான பொறுப்பு மற்றும் வாய்ப்பு என இரண்டாகவும் நாம் இதனைப் பார்க்கின்றோம். விவசாயமானது பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்குவதுடன்  எமது பெறுமதி சங்கிலி நிதி வழங்கல் நிகழ்ச்சித்திட்டமானது ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் வலுப்படுத்துவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது - மூலதனமிடல் ஊடாக மாத்திரமின்றி இத்தகைய பங்குடைமைகளின் ஊடாகவும். MDF உடனான இக்கூட்டிணைவானது அடிமட்டத்தில் பொருளார்ந்த பெறுபேறினை வழங்கும் என்பதுடன் தேசிய பொருளாதாரத்திற்கும் நேர்க்கணியமாக பங்களிக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.' என்றார்.  

இக்கூட்டுடைமையின் வாயிலாக, SDB வங்கி மற்றும் MDF என்பன துறைசார் பங்குதாரர்களுக்கு கூட்டு-முதலீட்டு வாய்ப்புக்களையும், உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்ப்பினை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை விரிவாக்கவும், சந்தை உள்ளிடல் மற்றும் எழுச்சியுற்றுவரும் வியாபாரங்களுக்காக உற்பத்தி பரிசோதனைகளை வளப்படுத்தவும், பரந்த வர்த்தக வலையமைப்புக்களுக்கு உற்பத்தியாளர்களை இணைப்பதன் வாயிலாக சந்தை நுண்ணறிவை வழங்குவதற்காகவும் நெருக்கமாக பணியாற்றவுள்ளன. இத்தகைய அணுகுமுறையானது சிறுவுடைமை பண்ணையாளர்கள்,செயன்முறைப்படுத்துநர்கள், மற்றும் விவசாய சுயதொழில்வாண்மையாளர்கள் என்போரை வலுப்படுத்தவும் அதேவேளை  துறைசார் நெகிழ்வுடைமை மற்றும் போட்டித்தன்மையை வளப்படுத்தவும் நோக்கங்கொண்டுள்ளது.

 MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மரியம்பிராச்சா அவர்கள் ' உலகளவில் உயருகின்ற கேள்விகளுடன்இலங்கையின் விசேட பண்டங்களான கோப்பி, மாம்பழம் மற்றும் தேங்காய் என்பன வளர்ச்சியில் சிறப்பான ஸ்தானத்தில் காணப்படுகின்றன. மூலோபாய முதலீடு மற்றும் வலுவான உள்ளுர் பங்குடைமைகளால் இத்துறைகளை உயர்பெறுமதியுடைய ஏற்றுமதி நகர்த்துகைகளுக்கு மாற்றவும்வியாபாரத்திற்கான உண்மை வருமானத்தையும் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளையும் உருவாக்க முடியும். SDB வங்கியுடனான இப்பங்குடைமையானது இலங்கையின் விவசாயத் துறையானது வலுவான உயரங்களை அடைவதனை பார்ப்பதற்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையினை உறுதிப்படுத்தும் என MDF நம்புகின்றது.

பெறுமதி சங்கிலியானது உற்பத்தியின் முழுமையான பயணத்தைபயிரிடல் மற்றும் அறுவடை முதல் செயன்முறைப்படுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் வரைபிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இலங்கையின் விவசாயத் துறையில் இச்சங்கிலி ஊடான பல செயற்பாட்டாளர்கள் மூலதனம், நிபுணத்துவம் மற்றும் சந்தை நெறிப்பாதைக்கான அணுகலில் நோக்கங்கொண்டுள்ளனர். இப்பெறுமதி சங்கிலி நிதி வழங்கல் துவக்கத்தின் ஊடாகSDB வங்கியானது இவ்விடைவெளிகளை நிரப்பவும் மிகவும்உள்ளடக்கமான கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக நிலைபேண் வளர்ச்சியை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளது.

MDF நிறுவனமானது, தேங்காய் கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளில் முக்கிய பங்குடைமையாளர்களுடன் ஏலவேவ லுவான உறவுகளை கட்டமைத்துள்ளதுடன்இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலான முதல் தடைவையாக இலங்கையில் வங்கித்துறை பங்காளருடன் ஈடுபட்டுள்ளமையானது சந்தை அபிவிருத்தி முயற்சிகளுடன் நிதிசார் தீர்வுகளை ஒருங்கிணைப்பதனை நோக்கிய முக்கியதொரு முன்னெடுப்பினையும் குறிக்கின்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வினைத்திறனுடன் ஈடுபடவும் தேசத்திற்காக மிகவும் நெகிழ்வுடையதும் உள்ளடக்கமானதுமான விவசாய பொருளாதாரத்தினை கட்டமைக்க பங்களிக்கவும் தொடர்புடைய அனைத்து அரசாங்க முகவரகங்கள், அபிவிருத்தி பங்குதாரர்கள் மற்றும் தனியார் பங்குடைமையாளர்களையும் ஊக்குவிக்கின்றது.

SDB வங்கி:

வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனி நபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச்ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவிய ரீதியில் 94 கிளைகளின்  வலையமைப்பினூடாக, வங்கியானது நாடு முழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமான வகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பட விளக்கம்

இடமிருந்து வலம்: ஹிருணி லியனாராச்சி> வியாபாரஆலோசகர் - MDF; விஷான் ராஜகருணா> வியாபாரஆலோசகர் - MDF; தேசான் விக்கிரமசிங்கே> இலங்கைஅணி ஒருங்கிணைப்பாளர் - MDF; காஞ்சனாஹிரிமுதுகொட> முகாமையாளர் - VCF மற்றும் விவசாயசுயதொழில்வாண்மை அபிவிருத்திSDB வங்கி; கபிலஆரியரத்ன> SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி; சிதரல் டி சில்வா> சிரேஸ்ட வங்கிஅதிகாரி SDB வங்கி; ஹேமல் கீகனகே> வியாபர வங்கிமற்றும் SME தலைவர்... - SDB வங்கி; பினேஷ் அரவிந்த கிளைவங்கியியல் தலைவர் - SDB வங்கி; தரங்க டி சில்வா> சிரேஸ்டமுகாமையாளர் - SDB வங்கி; மாலிக் ஷெரிப்புத்தின்> பிரதிஇலங்கைக்கான பணிப்பாளர் - MDF;

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd