அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்த போதிலும், கோரிக்கையை புறக்கணித்து சில நிறுவனங்கள் தொடர்ந்தும் இவ்வாறான வைபவங்களை நடத்துவது தெரியவந்ததை அடுத்து அவர் இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார்.
பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், நிதியமைச்சகச் செயலர் ஏப்ரல் 26ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு, பொது நிறுவனங்களின் விழாக்கள், திறப்புகள், மாநாடுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற மற்றும் முன்னுரிமையற்ற செலவினங்களை நிறுத்தி, பொதுப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஜனாதிபதி செயலாளருக்கு ஆகஸ்ட் 15ஆம் திகதி சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.
மனைவியின் வீண் சந்தேகத்தால் கணவனுடன் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக கணவன் தனது ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.
பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இந்த திருமணமானவர், கடந்த 26ஆம் திகதி மாலை வெளியே சென்றபோது, தனது மனைவி வழிதவறிச் சென்றதாகக் குற்றம் சுமத்தியபோது, வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கேட்டுள்ளார்.
மனைவியின் சந்தேகத்தை போக்கவென கணவன் தனது ஆணுறுப்பை வெட்டி காட்டியுள்ளார்.
எனினும் ஆணுறுப்பு பிரிக்கப்படாததால் வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொட்ட்டுவமற்றும் ஐ.தே.க.வின் தலைமையில் பல கட்சிகளின் சிரேஷ்டர்களின் பங்கேற்புடன் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
அதற்காக மொட்டுவும் ஐ.தே.கவும் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினரையும், சமகி ஜன பலவேகவின் எம்.பி.க்கள் குழுவையும் உள்வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணி அமையாது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன் தரப்புக்கோ ஆசனங்கள் குறைவாக கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்ற மாபெரும் துரோகத்தை அடுத்த தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்ற சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கே அவர்கள் அவரசமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
தேர்தலுக்குச் சென்றால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் தங்களுக்கு அங்கீகாரம் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக மக்கள் ஆணையுள்ள தரப்புக்களுடன் கலந்துரையாடி அவர்களது ஆதரவு தனக்கு இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடப்பதாகவும், நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டிருருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் அவ்வாறு ஏதேனும் சவால் விடுத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அச்சுறுத்தல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறான கட்டுப்பாடுகளால் தம்மைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துத் துறைகளும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை இவ்வாறான நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று சாம்பலைத் துடைத்துவிட்டு மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவனல்லை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
82 அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களின் தகவல்கள் வெளியே செல்வது நல்லதல்ல எனவும் அமைச்சர்களிடம் தனித்தனியாகச் சென்று இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவர்களில் பலரது மின் கட்டணம், மற்றவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பலரும் அமைச்சர் மீது குற்றம் சுமத்திய போதிலும், மின்சாரத்தை துண்டித்தது அவர் அல்ல, மின்சார சபையே என அவர் தொடர்ந்து கூறினார்.
நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மின்சார அமைச்சர் பதவியைப் பெற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
தேவையான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தமக்கு பொறுப்பு வழங்கினால் அதனை நிறைவேற்றுவேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நிலவும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் போது தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் உறுதி செய்தார்.
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மற்றும் தூதுவர்கள் மீளாய்வு செய்ததுடன், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களின் தவறான தகவல்களைக் கண்டித்தனர்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க உறுதிபடுத்தியுள்ளார்.
சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.
கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.