web log free
April 29, 2025
kumar

kumar

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

அவ்வாறு  இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வருமாறு, 

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இன்று(19) மற்றும் நாளைய(20) தினங்களில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், ​போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் மறிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்:

காக்காபள்ளிய, கட்டுநாயக்க, ரம்புக்கனை, காலி, கேகாலை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, கம்பளை, கண்டி, மத்துகம, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தண்டவாளங்களும் மறிக்கப்பட்டுள்ளமையால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்து எரிக்கப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும்  7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
 
ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
 
  1. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் – பாதுகாப்பு
  2. ரோஹன திஸாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  3. அருந்திகா பெர்னாண்டோ – தோட்டங்கள்
  4. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
  5. தாரக பாலசூரிய – வெளிவிவகார
  6. இந்திக அனுருத்த – வீடமைப்பு
  7. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
  8. சிறிபால கம்லத் – மகாவலி
  9. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசனம்
  10. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
  11. பிரசன்ன ரணவீர – தொழில்கள்
  12. டி.வி. சானக – சுற்றுலா மற்றும் மீன்பிடி
  13. டி.பி. ஹேரத் – கால்நடைகள்
  14. காதர் மஸ்தான் – கிராமப்புற பொருளாதார பயிர் சாகுபடி மற்றும் ஊக்குவிப்பு
  15. அசோக பிரியந்த – வர்த்தகம்
  16. ஏ. அரவிந்த் குமார் – தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு
  17. கீதா குமாரசிங்க – கலாச்சாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
  18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவைகள், வர்த்தக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  19. கபில நுவன் அத்துகோரல – சிறு பயிர் தோட்ட அபிவிருத்தி
  20. டாக்டர் கயாஷான் நாவானந்தா – ஆரோக்கியம்
  21. சுரேந்திர ராகவன் – கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள்
  22. சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழிநுட்பம்
  23. டயானா கமகே - போக்குவரத்து 
  24. விஜித பேருகொட - துறைமுகம் மற்றும் கப்பல் சேவை

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே பிரதமர் இல்லாமலேயே அமைச்சரவை பதவியேற்றுள்ளது.அதன் பின்னர் பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து பேசியுள்ளனர்.

இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த பிரதமர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 

நீண்ட விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை முதல் பலர் பணிக்கு சென்றிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எனினும் இன்று பிற்பகல் முதல் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்போது செய்ய வேண்டியது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதுதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவத்துவல தெரிவிக்கின்றார்.

அதற்கு பதிலாக மீண்டும் அமைச்சரவையை நியமிக்கும் செயற்திட்டத்தை திமிர்பிடித்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களின் ஆணவ ஆட்சி தொடருமானால், லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்சக்களுக்கும் ஏற்படும் என அவர் எச்சரித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd