கொழும்பு பங்குச் சந்தை இன்று (25) மூடப்படும்.
ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 சுட்டெண் 10 வீதத்திற்கும் (12.64%) மற்றும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9 வீதத்திற்கும் (9.6%) வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணமாகும்.
இலங்கை பங்குச் சந்தையில் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் (SEC) இடைநிறுத்தம் .
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சித் தலைவர்களுக்கு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், விரிவான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளது. இந்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கைக்கு உதவ ஒவ்வொரு நாடுகளும் தயங்கிக் கொண்டு வருகிறது. இந்தியா அரசு மட்டும் தான் தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டு வருகிறது. எனவே இலங்கை மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் தேவையும் விலைவாசியும் அதிகரித்துள்ளது. எனவே இலங்கை மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு தினம்தோறும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக வருகின்றனர். அந்த வகையில் இன்று 15 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 15 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து இன்றுவரை சுமார் 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இன்று வந்த 15 இலங்கை தமிழர்களிடம் கடும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்களின் விருப்பத்திற்கேற்ப விலையை அதிகரிக்க முடியும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் இம்முறை 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 1000 ரூபாவை தாண்டும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.
113 உறுப்பினர்களின் கையொப்பம் தேவைப்படும் நிலையில் பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள் கூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது, தற்போது 103 ஆசனங்கள் மாத்திரமே அரசுக்கு காணப்படுகின்றது பிரேரணைக்கு 113 உறுப்பினர்கள் கையொப்பம் கிடைக்காவிட்டால் பதவி விலகும் நிலை பிரதமர் மகிந்த தள்ளப்படுவர் ,எனவே பதவி துறக்கும் அறிவிப்பை மகிந்த விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
'தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவான்மியூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், தி.மு.க.,விற்கும் காலம் காலமாக உள்ள தொடர்பு தொடரும். இதில், கலகத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சியாக இருந்த போதே, இஸ்லாமியர்களுக்காக தி.மு.க., குரல் கொடுத்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்காக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது.
மதம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும், அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்; பலமும் அதிகம்.
தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி செய்தால், தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கின்றனர். நம்மை பிளவுப்படுத்துவதன் வாயிலாக, நம் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர். அதற்கு தமிழினம் பலியாகக் கூடாது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து, தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதியான, நிம்மதியான நாடு தான் அனைத்து விதமான வளர்ச்சியையும் பெற முடியும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழலை, ஓராண்டு காலத்தில் நம் அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
மருதானை, டெக்னிக்கல் வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியில் வருவோர் காலி முகத்திடல் போராட்டக் களத்திற்குச் செல்வர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெறவுள்ள போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸாரால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டு நிரந்தர வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு திடீரென இந்த வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக இன்று கொழும்பு நோக்கி வருகை தருகின்றனர்.