Homeசினிமா செய்தி3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

spot_img

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி திரைக்கு வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி திரைக்கு வர இருந்த ‘ஜன நாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

கடந்த 6 மாதமாக தணிக்கை வாரியத்தின் பரிசீலனையில் இருந்து வந்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு சமீபத்தில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் சுமார் 3,000 திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பதாக ‘ஜன நாயகன்’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக ‘ஜன நாயகன்’ வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர். 

1972 இல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முடிக்கப்படாமல் இருந்த படங்களை நடித்து முடிப்பதற்காக பதவி ஏற்பு விழாவை ஒத்தி வைத்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜூன் 30 ஆம் திகதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மீனவ நண்பன் படம் வெளியானது. 

இதேபோல் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொண்ட பின் அவர் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...