Homeவணிக செய்திஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY'இலங்கைச் சந்தையில் அறிமுகம்

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

spot_img

ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’ இலங்கைச் சந்தையில் அறிமுகம்

இலங்கையின் முன்னணி வர்ணப் பூச்சு வர்த்தக முத்திரையான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே, உள்நாட்டுச் சந்தையில் மற்றுமொரு முன்னோடி அறிமுகமாக ‘Royale INFINITY’ எனும் அதிநவீன ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சை உத்தியோகபூர்வமாக 

அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய வைரப் பரிபூரணம்’ எனும் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள இத்தயாரிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு, நீர்கொழும்பு ‘ஹெரிட்டன்ஸ்’ விடுதியில் நாட்டின் முன்னணி வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் மத்தியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

வர்த்தகப் பங்காளர்களுடனான நீண்டகால நம்பிக்கைக்குரிய உறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்த இந்நிகழ்வில், ஆடம்பர விருந்தோம்பலுடன் தொழில்நுட்ப விளக்கங்களும் வழங்கப்பட்டன. நுட்பமான நேர்த்தியையும், உயர் தரத்தையும் விரும்பும் வீடுகளுக்காகவே இத்தயாரிப்பு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை வருகை தந்திருந்த விருந்தினர்கள் நேரடியாக அனுபவித்தனர்.

இலங்கை நுகர்வோரின் தேவைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், சுவர்களின் அழகை முதல் பார்வையிலேயே அடையாளம் காணும் ஆடம்பரத்தை விரும்பும் நுகர்வோர்களை இலக்காகக் கொண்டே ‘Royale INFINITY’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சந்தையில் இதுவரை இல்லாத வகையில், தொட்டு உணரும் போது 5 மடங்கு அதிக மிருதுவான சுவர்களின் மேற்பரப்பை வழங்கி, காட்சிக்கும் தொடுகைக்கும் இணையற்ற நேர்த்தியை அளிப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுக விழாவில் உரையாற்றிய ஏசியன் பெயிண்ட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் தெற்கு பசுபிக் தீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் திரு. புத்தஆதித்ய முகர்ஜி, இலங்கையின் ஆடம்பர வர்ணப் பூச்சுத் துறையில் இந்த அறிமுகம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டார். இங்குள்ள உயர்தர நுகர்வோர்கள் பூரணமான தரத்தையே எதிர்பார்ப்பதால், ‘Royale INFINITY’ மூலம் சர்வதேசத் தரம் மற்றும் நானோ தொழில்நுட்பத்தை இணைத்து எமது வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகப் பங்காளர்களுக்கும் இணையற்ற அனுபவத்தையும் மதிப்பையும் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவரான திரு. வைத்திப்பிள்ளை கிரிதரன், சந்தைக்குப் புதிய மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம் எனக் கூறினார். ‘Royale INFINITY’ என்பது வெறும் வர்ணப் பூச்சு மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் தீர்வாக அமைகிறது என்றும், 5 மடங்கு அதிக மிருதுவான மேற்பரப்புடன் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சான்றிதழ்களையும் வழங்கி, நாட்டின் வர்ணப் பூச்சுத் துறையில் ஆடம்பரம் மற்றும் நிலைபேறான தன்மைக்கு ஒரு புதிய தரக்கோலை நிறுவியுள்ளதில் பெருமிதமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினசரி பயன்பாட்டினால் ஏற்படும் கறைகள் மற்றும் உராய்வுகளிலிருந்து சுவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் இத்தயாரிப்பு, சுவர்களில் ஏற்படும் 1.07 மி.மீ வரையிலான மெல்லிய வெடிப்புகளைக்கூடத் திறம்பட மறைக்கும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகச் சூத்திரப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோரின் மாறுபட்ட அழகியல் விருப்பங்களுக்கு ஏற்ப 3,000 க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கிடைக்கப் பெறும் இத்தயாரிப்பானது, சுவர்களுக்கு நுட்பமான மிளிரை அளிக்கும் ‘Luxe Pearl Finish’ மற்றும் பளபளப்பற்ற நவீன நேர்த்தியைத் தரும் ‘Soft Matt Finish’ ஆகிய இரு பிரதான வகைகளில் கிடைக்கின்றது.

அழகியலுக்கு அப்பால், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Wimpey Laboratories LLC அமைப்பின் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதன் மூலம் Royale INFINITY தனது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தியுள்ளது. பூஞ்சை மற்றும் பூசண வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும் மேற்பரப்பாகச் சான்றளிக்கப்பட்டுள்ள இத்தயாரிப்பு, 99.9% பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குறைந்தளவு ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (Low-VOC) கொண்ட இதன் சூத்திரம் மூலம் வீட்டின் உட்புறக் காற்றின் தரத்தைப் பாதுகாப்பதுடன், 7 வருட செயற்திறன் உத்தரவாதத்துடன் சந்தைக்கு வருகிறது.

நீர்கொழும்பு அறிமுக விழாவில் கலந்துகொண்ட வர்த்தகப் பங்காளர்கள் இத்தயாரிப்பின் விரிவான சிறப்பம்சங்கள் குறித்து பெரும் ஆர்வம் காட்டியதுடன், சந்தையின் மிகவும் புதுமையான வர்ணப் பூச்சு வழங்கி எனும் ரீதியில் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே மீதான தங்களது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினர். Royale INFINITY அறிமுகத்தின் மூலம், இலங்கை அலங்கார வர்ணப் பூச்சுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம், வடிவமைப்புச் சிறப்பு மற்றும் பொறுப்பான நுகர்வுப் பழக்கம் ஆகியவற்றை வழங்கும் தனது உறுதிப்பாட்டை நிறுவனம் மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே பற்றி:

இலங்கையின் முன்னணி வர்ணப் பூச்சு நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே, அலங்கார வர்ணப் பூச்சுகள், மரப் பூச்சுகள், வாகன வர்ணப் பூச்சுகள் மற்றும் தொழிற்துறை வர்ணப் பூச்சுகள் உள்ளிட்ட துறைகளில் உலகத் தரத்திலான தொழில்நுட்பம், புதுமை மற்றும் வடிவமைப்புச் சிறப்பை வழங்கி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. புத்தாக்கம், நிலைபேறான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நாட்டின் வர்ணப் பூச்சுத் துறையில் புதிய தரங்களை இந்நிறுவனம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this

வியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல், ஹோ சி மின் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய...

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...