Homeஉள்நாட்டு செய்திசர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

spot_img

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ள தயாராகி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2028ஆம் ஆண்டு முதல் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், அதற்கு முன்னதாக 2027ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதே அரசாங்கத்தின் உள்நோக்கம் என ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுவரொட்டிகளை ஒட்டுதல் அல்லது வாழ்த்து அட்டைகளை அச்சிடுதல் போன்ற சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினரை குறிவைக்கும் அரசாங்கம், 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் மற்றும் 90 நிலக்கரி கப்பல்கள் தொடர்பான பாரிய ஊழல் மோசடிகள் குறித்து எந்தவித விசாரணைகளையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய எரிசக்தி நிலைமை தொடர்பாகவும் எச்சரிக்கை விடுத்த ரணவக்க, அரசாங்கம் முறையாக நிலக்கரியை இறக்குமதி செய்யத் தவறினால், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிக்குள் நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய...

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

More like this