Homeஉள்நாட்டு செய்திகண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

spot_img

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கண்டி கடவத் சதர மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.

அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தரம்பொத்த கிராம அலுவலர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதி உலா வருவதிலிருந்து, பெரஹெரா நிறைவடையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

இதற்கு இணையாக, கண்டி மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

Latest articles

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய...

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

More like this