இலங்கை நாடாளுமன்றத்தினால் சபாநாயகரின் அலுவலகம், நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020–2024) ரூ.894,013,863 செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொண்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதில் அதிகூடிய தொகை நாடாளுமன்ற பணியாளர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை ரூ.873,703,294 ஆகும்.
இதே காலப்பகுதியில் சபாநாயகரின் அலுவலகத்திற்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக ரூ.10,716,979 செலவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் பானங்களுக்காக இந்தக் காலப்பகுதியில் ரூ.9,593,590 செலவிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கான உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.2,278,758.12 செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் நான்கு உணவகங்கள் இயங்கி வருகின்றன. நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத சாதாரண நாட்களில் சுமார் 1,200 பேருக்கும், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் சுமார் 1,800 பேருக்கும் சராசரியாக மதிய உணவு தயாரிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




