Homeஉள்நாட்டு செய்திஅதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

spot_img

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கைக்கு பின்னால் பூட்டான் மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் பெறும் சம்பளம் மற்றும் அந்தச் சம்பளத்தின் மூலம் அவர்களால் பெறக்கூடிய கொள்வனவு சக்தி ஆகியவற்றை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் சராசரி மாதச் சம்பளம் 3,804 அமெரிக்க டொலர்களாகும்.

ஜெர்மனி 2,928 அமெரிக்க டொலர்களுடனும், ஐக்கிய இராச்சியம் 2,902 அமெரிக்க டொலர்களுடனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

ஹெய்ட்டி, கினியா, சியரா லியோன், காம்பியா, கினி-பிசாவ் மற்றும் நைஜர் உள்ளிட்ட நாடுகள் இலங்கையை விட கீழ் நிலையில் இடம்பெற்றுள்ளன.

spot_img

Latest articles

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் இனி தவிர்க்க வேண்டும்

– சஜித் பிரேமதாச எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல்...

இலங்கை நாடாளுமன்ற உணவு மற்றும் சீருடை செலவு ரூ.894 மில்லியன்!

இலங்கை நாடாளுமன்றத்தினால் சபாநாயகரின் அலுவலகம், நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக கடந்த...

More like this