Homeஉள்நாட்டு செய்திQR முறை தொடரும்

QR முறை தொடரும்

spot_img

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதாகவும், சில நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“அவசர நிலைமை அல்லது மிகவும் விசேடமான சூழ்நிலை தவிர, கடந்த ஆறு மாத காலப்பகுதியில் வழங்கப்பட்ட எரிபொருள் அளவு போதுமானதாகவே இருந்துள்ளது.

எனக்கு நினைவிருக்கிறது, எரிபொருள் விலை இதைவிட அதிகமாக இருந்த காலத்திலும் QR குறியீடு நடைமுறையில் இருந்தது. அப்போது எமது எரிபொருள் நுகர்வு 50 சதவீதத்தால் குறையவில்லை.

பெட்ரோல் நுகர்வு 9 சதவீதம் மட்டுமே குறைந்திருந்தது. டீசல் நுகர்வு 18 சதவீதம் குறைந்திருந்தது. அதனால் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள்.

ஆனால், நாம் இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டை பேண வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் டொலர் அளவை ஒருவிதத்தில் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இல்லையெனில் டொலரின் விலை 550 அல்லது 600 ரூபாய் வரை செல்ல ஆரம்பித்தால், அது பொருளாதாரத்திற்கு பிரச்சினையாக மாறும். எனவே, அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

QR முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. எங்காவது அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தால், அது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும்.

பொதுவாகப் பார்க்கும்போது, முந்தைய காலத்தைவிட தற்போதைய நிலையில் QR குறியீடு அதிகமாக பரிசோதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அவ்வாறு பரிசோதிக்கப்படுவதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.”

spot_img

Latest articles

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய...

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

More like this