“வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்று இலங்கை மத்திய வங்கியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நாட்டிற்கு தொழிலாளர் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்துவதற்கு இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இந்த திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பெறுமதி சேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன், பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூக - பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் எனும் பின்னணியில் இத்திளைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் - ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளை நோயான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் இலக்கை நிர்ணயித்து தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு சில நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், ஊசியால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவைகளால் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
அதற்கு தீர்வு காணும் வகையில், கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு முதல் நாடாக பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
Merck, Ridgeback Biotherapeutics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியான உடனே அல்லது கிருமித்தொற்று அறிகுறி தென்பட்ட 5 நாளுக்குள் அந்த மாத்திரையை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் அந்த மாத்திரை Lagevrio என்ற பெயரில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயமுடையோர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அல்லது இறந்துபோகும் சாத்தியத்தை, அந்த மாத்திரை பாதியாகக் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரையை பெற சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகள் அவற்றைப் பெற முன்பதிவு செய்துள்ளன.
Influenza வுக்காக உருவாக்கப்பட்ட Molnupiravir என்றழைக்கப்படும் அந்த மாத்திரை, Lethal mutagenesis எனும் செயல்பாட்டின் மூலம் கொரோனா கிருமிகள் உடலில் மீண்டும் உருவாவதைத் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்திரையை உட்கொள்வோருக்குப் பெருமளவில் பக்கவிளைவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் மாத்திரைத் தொகுதிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பல நாடுகள் முன்பதிவு செய்திருப்பதால், அடுத்த ஆண்டு மேலும் அதிகமான மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் போதை மாத்திரைகளை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அடையாளம் காணப்பட்ட இரு கார்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதிலிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.நகரை சேர்ந்த ஒருவரையும், கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சீனி, பருப்பு, கோதுமை மா உள்ளிட்ட 17 அத்தியாவசிய உணவுப் பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா உள்ளிட்ட 17 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாசிப்பயறு, நெத்தலி, ரின் மீன், கடலை, , கருவாடு, சோளம் ஆகியவற்றுக்காக அதிகபட்ச சில்லைறை விலை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
17 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம் நேற்று 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னர் வெளியிடப்பட்ட 07 கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.