web log free
August 03, 2025
kumar

kumar

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான றோய் சமாதானம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரைச் சந்தித்து, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது நாட்டை விட்டு வெளியேறிய பெருந்தொகையான மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாதவாறு நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கி, அதனை முன்னெடுப்பதன் அவசியத்தை ரோய் சமாதானம் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தர்கள் பாகுபாடு காட்டப்படுவதாகவும், விகாரை கட்டுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சிரந்த வளலியெத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு ரீதியாக பௌத்த மதத்தில் பிற மதங்களை நம்பும் மக்கள் செல்வாக்கு செலுத்த முடியாத வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென சிரந்த வளலியத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தலைமைத்துவத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவரையும் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் , அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும்,இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

 ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேபாள பிரதமர் தஹால் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900 பேர் காயம் அடைந்துள்ளனர். அரசு சார்பில் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

நிலைமையை சீராக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.ரெயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். 

இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை மக்கள் சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது அரச புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திய நபர்களினால் துப்பாக்கி முனை கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. 

துப்பாக்கியுடன் வந்த ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொருவர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

வந்தவர்கள் புலனாய்வு பிரிவினர் என தெரியவருகிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விசேட காரணமொன்றின் காரணமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இந்த வாரம் கூடிய நாடாளுமன்றக் குழுவில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குழுவிலிருந்து வெளியேறுவதால், அதற்காக நியமிக்கும் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கணிசமான அனுபவமுள்ள நிபுணரான பொன்சேகா இங்கு இருக்க வேண்டும் என அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த பதவியை விட்டு விலக வேண்டாம் என கேட்டுக் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ரவூப் ஹக்கீம், இந்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எம்.பி என்பதால் பொன்சேகாவிற்கு அவர் தலைமையில் செயற்பட முடியாது என  தெரிவிக்கப்பட்டது.

எனவே தம்மை இப்பதவிக்கு நியமிக்குமாறு ரவூப் ஹக்கீம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அது குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு நாடாளுமன்றத்தில் செயல்படும் முக்கிய குழுக்களில் ஒன்றாகும்.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் என அறிந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உத்தரவுகளை பெற்றுக் கொள்ளாததால் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகஸ்தர்கள் 50% ஆகக்குறைந்த கையிருப்பை பேண வேண்டும் எனவும், அவ்வாறு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமத்தை மீளாய்வு செய்து இடைநிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு குறித்தும், அவரது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளோபல் ஸ்ரீலங்கா காங்கிரஸின் தலைவர் மஞ்சு நிஷங்க தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த நபர் குற்றம் செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

மஞ்சு நிசங்கவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd