அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 316.84 விற்பனை விலை ரூ. 334.93.
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் இந்த விலை திருத்தத்தின் பிரகாரம் 80 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (20) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ. 663,409.00
24 காரட் 1 கிராம் – ரூ. 23,410.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 187,250.00
22 காரட் 1 கிராம் – ரூ. 21,460.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 171,700.00
21 காரட் 1 கிராம் – ரூ. 20,490.00
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் புதன்கிழமை (22) கோட்டை புகையிரத நிலையத்தில் ஒன்று கூடி தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து மேலதிக தீர்மானங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூறினார்.
CTU, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் (AIUTU), மற்றும் கூட்டு ஆசிரியர் சேவை சங்கம் (JTSU) உட்பட அனைத்து ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி குறைவினால் விமானப் பயணச்சீட்டுகளின் விலை சுமார் 20% குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதனை மேலும் குறைப்பதாக விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் சோதனைகள், நடவடிக்கைகள், சந்தேக நபர்களின் விசாரணைகள், கைதுகள் போன்றவற்றின் வீடியோக்கள் மற்றும் படங்கள் ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக வெளியிடுவதைத் தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மீனகாயா ரயிலில் ஒரு குழந்தையை கைது செய்து விசாரணை செய்யும் வீடியோ காட்சிகள் அனைத்து முக்கிய ஊடகங்களிலும் பரப்பப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விதம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வதால் சந்தேகத்திற்குரிய நபரை தர்மசங்கடப்படுத்துவதுடன் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் சோதனைகளுக்கு ஊடகவியலாளர் குழுவை அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பதில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் அல்லது அவள் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது எனவும் கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக உள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம் எனவும் ,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல ,
இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகக் குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தலை நடத்தினால் மிகவும் நல்லது. ஆனால் இப்போது அது கடினம் என்று தெரிகிறது. ஏனென்றால் தபால் ஓட்டுக் கூட தேவையானா பேலேட் பேப்பர்கள் எங்களிடம் இல்லை.அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகள் கிடைத்த பிறகுதான் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.