web log free
April 27, 2025
kumar

kumar

மின் கட்டணத்தை 500% அதிகரிப்பதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சு ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பல வகைகளின் கீழ் இந்த விலை அதிகரிப்பு முன்மொழியப்பட்டதாகவும், அதிக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு இவ்வளவு அதிக மின் அதிகரிப்பை முன்மொழியவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் நபர்களுக்கு 500% மின்சார கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை தொலைக்காட்சி நாடகங்களில் உதவி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை வைத்து நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று மினுவாங்கொடை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விபச்சார விடுதியில் இருந்து நாடக நடிகை மற்றும் அவரது முகாமையாளர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தற்போது ஒளிபரப்பாகும் இரண்டு பிரபல தொலைக்காட்சி நாடகங்களில் கூடுதல் வேடங்களில் நடித்த பல இளம் பெண்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நாடகங்கள் இரண்டிலும் கூடுதல் வேடத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் நடிகைகளை அழைத்து வந்து தலா ரூ.60,000 வீதம் பல்வேறு நபர்களுக்கு பாலியல் ரீதியாக விற்பனை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 18,000 மில்லியனுக்கும் அதிகமான நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் போனஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டும் 5200 ஊழியர்களுக்கு மும்மடங்கு போனஸ் வழங்க கூட்டுத்தாபனம் ரூ.1560 மில்லியன் செலவிட்டுள்ளது.

 

தேசிய லொத்தர் சபையினால் 2008ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 8 மில்லியன் ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் அதிகாரிகளது அனுமதியின்றி, அப்போதைய தலைவரினால் அந்த கெப் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தலைவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனம், அன்று முதல் இன்று வரை காணாமல் போயுள்ளதாக கோப் குழு முன்னிலையில் உறுதியாகியுள்ளது.

இந்த வாகனம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட முழுமையான நட்டம், 26 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவே, அப்போதைய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றியிருந்தமையும் உறுதியாகியுள்ளது.

இந்த வாகனம் தொடர்பிலான ஆவணங்கள் அனைத்தும், தேசிய லொத்தர் சபை வசம் காணப்படுவதாக தெரிவித்த சபையின் அதிகாரிகள், வாகனமே காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டனர்.

இந்த வாகனத்திற்கு பணம் செலுத்தாமையினால், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனம், தேசிய லொத்தர் சபைக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பில், பணத்தை செலுத்துமாறு நீதிமன்றத்தினால், தேசிய லொத்தர் சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தின் பெறுமதி 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா என்பதுடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் 68 லட்சத்து 28 ஆயிரத்து 360 ரூபா 83 சதம் வட்டி அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் சட்டத்தரணிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, தேசிய லொத்தர் சபை 16 லட்சத்து 74 ஆயிரத்து 185 ரூபா சட்டத்தரணிக்கான கட்டணமாக செலுத்தியுள்ளது.

இந்த அனைத்து தொகையும் உள்ளடங்கிய வகையிலேயே 16 மில்லியன் ரூபா கணிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை, கோப் குழு முன்னிலையில் அறிவித்தது.

எனினும், குறித்த வாகனம், தேசிய லொத்தர் சபையின் பயன்பாட்டிற்கு எடுக்கப்படவில்லை எனவும் கோப் குழு முன்னிலையில் தெரிய வந்தது.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரண குணவர்தன இந்த வாகனத்தை பொறுப்பேற்றுள்ளதுடன், 2008ம் ஆண்டு மே மாதம் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன கெப் வாகனத்துடன், இரண்டு வாகனங்களை அவர் பயன்படுத்தியுள்ளதாக தேசிய லொத்தர் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், காணாமல் போன வாகனம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியாது என லொத்தர் சபை அதிகாரிகள், கோப் குழுவிடம் கூறியுள்ளார்.

மத்திய, மேல், தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை குறைந்து 750 ரூபாயால் அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பல் கட்டணம், காப்புறுதி கட்டணம், அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு என்ப காரணமாக உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க வேண்டும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

தற்போது ஒரு மெற்றி தொன் எரிவாயுவின் விலை தொள்ளாயிரம் டொலர்களாக அதிகரித்துள்ளது. கப்பல் கட்டணங்கள் 31 வீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமை காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரித்தாக வேண்டும் என எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதனடிப்படையில் தற்போது 2 ஆயிரத்து 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 3 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்க நேரிடும் எனவும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 

நடிகை சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது.
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய ’ஓ சொல்றியா மாமா’ பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துவந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா கருப்பு பச்சை உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று (10) நடைபெற்ற கட்சியின் கொழும்புல் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

”அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். அது தொடர்பில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கூட்டமைப்பு அரசியலில் நாம் தனித்துப் போட்டியிட்டு பின்னர் எமது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தரப்புடன் கூட்டமைப்பாக இணைந்து கொள்ள முடியும்”

என இதன்போது நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இரண்டு கப்பல்களில் அடங்கியுள்ள 7000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கெரவலப்பிட்டிய – ஹெந்தல கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயுவை ஏற்றிய கப்பல், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் விடுவிக்கப்படாமல் இருந்தது.

எவ்வாறாயினும், தற்போது அந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd