web log free
April 26, 2025
kumar

kumar

இலங்கைக்கு, இம்மாத இறுதியில் விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க உள்ளார்.

அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. ஒத்துழைப்புஇந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். வரும் 30ம் திகதி கொழும்பில், 'பிம்ஸ்டெக்' எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 31ம் திகதி யாழ்ப்பாணம் செல்கிறார்.


அப்போது, அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். தமிழர்களின் நலன், அதிகரித்து வரும் பயங்கரவாதம், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்திய மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி, இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைய உள்ளது. ஆலோசனைதற்போதுள்ள சூழ்நிலையில், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைய உள்ளது. இதையடுத்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிந்த மொரகொட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். அடுத்து, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பைரிஸ், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, இலங்கை துாதர் மிலிந்த மொரகொட, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து பேசப்பட்டது. மேலும், கடும் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவியையும் அவர் கோரியதாக கூறப்படுகிறது. அதனால் பிரதமர் மோடியின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மீண்டும் புதுப்பித்து கொள்ளவும், வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- புதுடில்லி நிருபர் -

சென்னை போரூர், ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு கிலேசியஸ் (வயது 49). இவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 மகள்களுக்கு இந்திய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி இந்திய நாட்டு பாஸ்போர்ட் பெற்று உள்ளதாக புகார் வந்தது.

இதையடுத்து போரூர் போலீசார், ஜெரால்டு கிலேசியஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை குடிமகனான ஜெரால்டு கிலேசியஸ், 2007-ம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போரூரில் வசித்து வந்தார்.

தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டில் குடிபெயர போலி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு பெற்று அதன் மூலம் தனது மகள்களான மேரி ஜென்சிகா (23), ரெஜினோல்ட் (21), மேரி சன்ஜிகா (20) ஆகியோருக்கு இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

5 பேர் கைது

இந்திய நாட்டு ஆவணங்களான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை போலியாக பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெரால்டு கிலேசியஸ், அவருடைய மனைவி மற்றும் 3 மகள்கள் என 5 பேரையும் கைது செய்தனர்.

முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் நிறுவுவதற்கு நிதி திரட்ட முயன்ற கும்பல் ஒன்றின் முயற்சியை கடந்த ஜனவரி 27-ந் தேதி அதிகாரிகள் முறியடித்தனர். அந்த கும்பலுடன் தொடர்புடைய லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ (51) என்ற பெண் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை தேசிய புலனாய்வுப்படையினர் தேடி வரும் நிலையில் இந்த கும்பலுக்கும், ஜெரால்டு கிலேசியஸ் குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டா? என அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் இன்று தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,  

உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர் வினவியபோது, ​​கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல எனவும், தேவைப்படும் போது தாம் அவ்வாறு செய்வதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களை ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார். இந்த கலந்துரையாடல் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேயுடன் சென்ற குழுவினர், கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தின் மீது முட்டைகளை கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிலர் முதலில் போராட்டத்தை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகம் மீது முட்டைகளால் தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.

பொலிஸார் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

இன்று காலை யா​னை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழக்கும் போது ´நெந்துன்கமுவே ராஜா´வுக்கு வயது 69 ஆகும்.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன், கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைத் தவிர, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாவார்.

கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் , நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு டீசல் வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

எண்ணாயிரம் மெற்றிக் தொன் டீசல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான 37 ஆயிரம் மெற்றிக்தொன் மசகெண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று இலங்கை வரவுள்ளது.

அந்த எரிபொருள் களனிதிஸ்ஸ உள்ளிட்ட மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று இடம்பெற்றது.

மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எதிர்வரும் தினங்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இதுவரை காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கிறது .

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது 12 ஆவது நாளாக ரஷ்யா போர் தொடங்கி தாக்குதல் நடாத்தி வருகின்றது.

முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி வருகின்றது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.     

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd