web log free
December 22, 2024
kumar

kumar

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றில் அறிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நாட்களில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும் என்பதால் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தென் கொழும்பு பொது வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் டொக்டர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வைத்தியர் திக்மதுகொட மேலும் கூறியதாவது:

“இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தலைசுற்றல் ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நாட்களில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்றவையும் பரவி வருவதால் காய்ச்சல் நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக தகுதியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வு, சமச்சீர் உணவு மற்றும் அதிக திரவங்களை அருந்த வேண்டும். முடிந்தவரை முகமூடிகளை அணிவது மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்துதல் ஆகியவை இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க உதவும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உளவுத்துறை தகவல் கிடைத்தும் இவ்வாறு செய்தமை ஊடாக  அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பொது சேவை புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து நட்டஈடாக வழங்க வேண்டும் என  நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் சமர்ப்பித்த 12 மனுக்களின் தீர்ப்பை அறிவித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, எல்.டி.பி தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்த 12 அடிப்படை உரிமை மனுக்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா வர்த்தகரான ஜனத் விதானகே, சரத் இத்தமல்கொட, மூன்று கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோடித ஏக்கநாயக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடம் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பணம் பெறக்கூடாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு உத்தரவிடக்கோரும் ரிட் மனுவை, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) தாக்கல் செய்தது.

2023 ஜனவரி 10 ஆம் திகதியன்று, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் ஹபுகின்னவினால், வெளியிடப்பட்ட கடிதத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் சட்டமா அதிபர் உட்பட 85 பேர். பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் கலாச்சாரம் அதிகரித்து தான் வருகிறது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்கரை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் மற்றும் புலன் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.

அப்பொழுது கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார்கள். அந்த சோதனையின் போது தான் அவரிடம் ஐஸ் போதை பொருள் இருப்பது தெரியவந்து இருக்கிறது. பிரபலமான போதைப்பொருள் கடத்தல்காரர் இதை செய்தார் என்று போலீசார் கூறினார்கள்.

அவர்களிடம் இரண்டு கிலோ ஐஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடைய சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடி இந்திய ரூபாய் இருக்கும். நடுக்கடலில் இலங்கை சேர்ந்த பிறகு போதை பொருள் மாற்றம் செய்யப்பட்டதாக அங்கிருந்து இது கடத்தி வரப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் ஆதர்ஷா கரந்தன கைது  செய்யப்பட்டுள்ளார்.

ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர் பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறினார்.

தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி சபாநாயகருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் 2 ½ ஏக்கர் நிலத்தை சந்தேக நபர் குத்தகைக்கு எடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 4 ½ அடி உயரமுள்ள 18,956 கஞ்சா செடிகளை STF அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்களுக்கு கனடா நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

மற்றைய இருவரும் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தி கனடா அவர்கள் மீது இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.

அவர்கள் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை பெறுவதைத் தவிர்க்குமாறு அமைச்சரவை வழங்கிய உத்தரவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை வேட்பாளர் பிணை வைப்புப் பணத்தைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd