மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் சமகி ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்ற போதே அது இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நீதிவான் விசாரணையின் சாட்சிகளை அழைக்க முடிவு செய்ததாக அவர் அங்கு கூறினார்.
மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதால், விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும் என்று தினேஷ் ஷாப்டர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
உலகச் சந்தையின் விலை அதிகரிப்பால் இந்நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் பயன்படுத்திய 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்தை முதலில் சமூகமயமாக்கியவர் யோஷித ராஜபக்ஷ, ஆனால் அவர் அதை உருவாக்கியாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று அவர் கூறுகிறார்.
போராட்டம் தொடங்கும் முன் நடந்த சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆதரித்ததால் தான் ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம், முறையான தயாரிப்பிற்காக சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்த வாரம் பெற்றுக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 10 மில்லியன் ரூபா நட்டஈடு தொகையை வழங்குவது சிறிய விடயம் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் மாத்திரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாவிட்டாலும், தனது நண்பர்கள் உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நானுஓயா பகுதியில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க விடுத்த உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்தியசாலைக்கு சென்று அவரை பரிசோதித்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொடர்ச்சியாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முதற்கட்டமாக இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு அந்த அமைச்சுப் பதவிகள் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்குச் சென்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தடுவ வீதி மஹானியார சந்தி பகுதியில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்து முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.