ஒரு முக்கியமான வாரத்தை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசனம் செய்தார்.
அனுராதபுரத்தில் உள்ள மிகப் பெரிய வரலாற்று பௌத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றான ருவன்வெலி மகா சேயாவிற்கும் பிரதமர் விஜயம் செய்தார்
லங்கா ஐ.ஓ.சி எரிபொருளின் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி அல்லது சிபெட்கோவில் விலை உயர்வு இல்லை என்றார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியான மற்றும் பொய்யான செய்திகளை பதிவிட்டு பகிர்பவர்களுக்கு எதிராக அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும்.
ஒரு நாள் சேவை தவிர்ந்த கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் திங்கட்கிழமை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை வெளியிடுகையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) முதல் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் சேவை செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் சிலர் பதவி விலகத் தயாராகி வருவதாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், பிரதமர் பதவி விலகினால், அதே நேரத்தில் அமைச்சரவையும் கலைக்கப்படும்.
அதன் பின்னர் ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக அறிக்கை.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.
மேலும் தற்போதைய சனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாகவும் நாங்கள் தெரிவிக்கின்றோம்.
இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
ஊடகப் பிரிவு,
ஐக்கிய மக்கள் சக்தி.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்தால், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் ஜனாதிபதி அழைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அன்றி, பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சஜித் பெயராமதாச தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் 5வது லேனில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன், முன்னாள் பிரதமருக்கு 'வீட்டிற்கு செல்லுங்கள்' மற்றும் 'வீட்டில் இருங்கள்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பிரதி சபாநாயகர் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வாக்களிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களை ரணில் வற்புறுத்துவதைக் காணக்கூடியதாக இந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததை அடுத்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது .
ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணிலின் வீட்டிற்கு வெளியே ஒன்று கூடி, ரணிலின் ‘டீல்களை’ நிறுத்தக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.முன்னாள் பிரதமர் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
போராட்டம் ஆரம்பமாகி ஒரு மணித்தியாலத்தில் ரணிலின் ஆதரவாளர்கள் குழுவும் அந்த இடத்தில் திரண்டு ரணிலை தலைவராக நியமிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு எனக் கூறி போராட்டத்தை ஆரம்பித்தனர். அப்போது ரணில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து போலீசார் நிலைமையை அமைதிப்படுத்தினர்.
தம்மைச் சந்திக்க விரும்பினால், திங்கட்கிழமை சிறிகொத்தவுக்கு வருமாறும், அங்கு கலந்துரையாடுமாறும் முன்னாள் பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, அந்நிய கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்றார்.
எதிர்காலத்தில் எரிபொருள் பைகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.