web log free
May 10, 2025
kumar

kumar

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமான முன்னாள் அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்தது.

ஆசியன் மிரருக்கு கிடைத்துள்ள தகவல் படி புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்கி அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அனுபவம் அற்றவர்களுக்கு  அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

20 அமைச்சரவை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. 10 சிரேஷ்ட அமைச்சர்களும் பத்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் விண்ணப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, நேற்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தை அண்மித்த  வீதியில் பொலிஸ்
ட்ரக் வண்டிகள் பல நிறுத்தப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

சில மணித்தியாலங்களின் பின்னர் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலி நகரில்​ ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில், நேற்றுமுன்தனம் முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டதையடுத்து, மற்றுமொரு இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அதற்கு “கோட்டாகோகம” என பெயரிடப்பட்டது.

இதனிடையே, காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனிநபர் ஒருவர், அனுராதபுரம் தொடக்கம் கொழும்பு காலி முகத்திடல் வரை நடைபயணத்தை நேற்று காலை ஆரம்பித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டாகோகம’ கிராமத்திற்கு நீர்கொழும்பில் இருந்து இசைக் கலைஞர்களுடன் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சென்றனர்.

நீர்கொழும்பில் இருந்து நேற்று காலை 7.10 அளவில் புகையிரதம் மூலமாக 150-இற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் நகர மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கொழும்பு நோக்கி வருகைதந்தனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்ற இவர்கள், கொழும்பு காலி முகத்திடலை 10.15 அளவில் அடைந்தனர்.

நீர்கொழும்பு மக்களும் இசைக்கலைஞர்களும் பாட்டுப்பாடி கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளித்திருந்தமை விசேட அம்சமாகும்.

சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் மதம் மாறும் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் ஜெய்,பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,நடிகர் சிம்புவின் தம்பி உள்ளிட்டோர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்தினை ஏற்று கொண்டனர். இதனிடையே தற்போது பிரபல நடிகர் விஷால் மதம் மாறிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் உலா வருகிறது. தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விஷால் பதிவிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் விஷால் 2004ஆம் ஆண்டு, வெளிவந்த செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.தற்போது வருடத்திற்கு ஒரு படத்திலாவது விஷால் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது விஷால்,சுனைனா நடிப்பில் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகி கொண்டிருக்கும் லத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ஆர் வினோத் குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் இவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் சிம்புவை போலவே 40 வயது கடந்தும் நடிகர் விஷாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ரசிகர்கள் விஷாலின் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பர். ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத விஷால், தன்னுடைய திரைப்படங்களை தயாரிப்பதிலும்,நடிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இத்தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க ஒரு பதிவை விஷால் பதிவிட்டுள்ளார். ஆனால் அப்பதிவில் ஒரு சர்ச்சையும் கிளம்பி உள்ளது.

அந்தப் பதிவில், இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும், நான் மீண்டும் மாமா ஆகிவிட்டேன், எங்கள் வீட்டின் இளவரசிக்கு தற்போது குட்டி இளவரசி பிறந்துள்ளார். அந்தக் குழந்தையையும் தம்பதியினரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் இன்ஷா அல்லாஹ் என்ற பதிவை விஷால் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டதை விஷால் மதம் மாறிவிட்டாரா என்று கேள்வியை எழுப்பியுள்ளனர்.

பொதுவாகவே இஸ்லாமியர்கள் இன்ஷா அல்லா என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவர். ஆனால் ஹிந்து மதத்தில் இருக்கும் விஷால் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்றால் கட்டாயம் இஸ்லாமிய மதத்திற்கு விஷால் மாறியுள்ளார் என்பதுதான் அர்த்தம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் விஷால் தரப்பிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இதனிடையே இப்பதிவு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காலிமுகத்திடலில் சிட்டி விளக்கில் #GoHomeGota விளக்கேற்றி ஜனாதிபதி பதவி விலக கோரி போராட்டம் முன்னெெுக்கப்படுகிறது. இன்று 8வது நாளாக தொடரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றதாக வதந்தி பரவிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகரவை தொடர்பு கொண்டு கேட்டபோது, பசில் மூன்று முக்கிய விமான நிலையங்களான BIA, மத்தல மற்றும் இரத்மலானை ஊடாக பசில் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், அத்தகைய வதந்திகள் பொய்யானவை எனவும் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், முன்னாள் நிதியமைச்சரை அதில் செல்லவில்லை என்றும் ஷெஹான் கூறினார்.

கோவிட்-19 தொற்றுடன் நேற்று அனுமதிக்கப்பட்ட பசில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆதாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவிலில் பூஜை வழிபாடுகள் நடத்திய பூசகர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பொலன்னறுவை - யக்குரே பகுதி கோவிலில் இந்த பூஜை இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் நேற்று கோவிலுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் பூசகர் மீது தாக்குதல் நடத்தி கோவிலுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக தான் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக அவர் நேற்று கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் ஒன்றில் டுபாய் சென்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பசில் ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளியான இலங்கை பத்திரிகையாளர் பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.

போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு நேற்று (15) இரவு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்து ஆதரவு தெரிவித்துள்ளது. 

இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd