web log free
May 10, 2025
kumar

kumar

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்காக எடுத்த தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்க இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.

பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நிலையில், அழுத்த நிலைமை காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நள்ளிரவு தாண்டி இன்று காலையும் தொடர்கிறது. 

மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மழையில் நனைத்தபடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதன் புகைப்படங்கள் சில வருமாறு, 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
 
பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். 
 
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.
 
இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
 

'கோட்டா கோ ஹோம்' - காலி முகத்திடல் வளாகத்தில் இன்று காலை ஆரம்பமான மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இரவிலும் தொடர்கின்றது.

அரசாங்க ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கினால் ஜனாதிபதி பதவியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் ஆட்சியை ஏற்பதானால் ஜனாதிபதி பதவியுடன் கூடிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

இலங்கையின் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் மிக்கி ஆர்தரின் இரண்டு வருட ஒப்பந்தம் ஜனவரிலயில் முடிவடைந்ததை அடுத்து தற்போது காலியாக இருந்த பதவியை சில்வர்வுட் ஏற்றுக்கொள்கிறார்.

சில்வர்வுட் சமீபத்தில் இங்கிலாந்து ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார், ஆனால் பேரழிவு தரும் ஆஷஸ் தொடருக்குப் பிறகு நீக்கப்பட்டார், இங்கிலாந்து ஐந்து டெஸ்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தற்காக .

2022 டி 20 உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய தொடரைத் தொடங்குவதற்கு முன், இலங்கையுடனான அவரது முதல் பணி அடுத்த மாதம் பங்களாதேஷில் ஆரம்பமாகும் எனவும் தெரியவருகின்றது .

பேரூந்துகளுக்கு ஏற்றப்படும் ஆட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை வெளியிடுகிறது ,தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் முந்தியும் செலுத்தப்படும் ஆட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று தெரிவித்துள்ளது.

LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, பேருந்துகளுக்கு செலுத்தப்படும் டீசல் மண்ணெண்ணெய் போன்ற வாசனையை வெளியிடுகிறது.

சமீபத்தில் ஊடகங்களுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு டீசல் மாதிரிகளை காண்பிக்கும் போது, ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுகிறது ஆனால் மற்றொன்று இல்லை என்று கூறினார்.

நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் டீசலின் தரத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்றார்.

மாதிரிகள் விசாரணைக்காக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி தற்போது பாரிய அரசியல் நெருக்கடியாக மாறி சென்றுகொண்டிருப்பதாகவும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர் இதற்கு , மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் பாரதூரமான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளருக்கு அறிவிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
து.

மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கும் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாரடைப்பு நோயாளிகளுக்கு இரத்தத்தை கறைக்கும் streptokinase மற்றும் tenecteplase ஆகிய மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளில் அடங்கும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளும் வைத்தியசாலைகளில் இல்லை என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

விபத்து சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. ஐ.சீ குழாய்கள் (IC குழாய்) மற்றும் இண்டர்கோஸ்டல் குழாய் மற்றும் சிறுநீர்க்குழாய் பற்றாக்குறை உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் மற்றும் வலி நிவாரணியான மோர்பின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்த பாரதூரமான சுகாதார அபாயத்தைக் கடப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, இரத்மலானையில் உள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு முன்னால் அதன் ஊழியர்கள், மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்து தட்டுப்பாடு குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் (09) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

விலங்குகளுக்கான உணவுப் பொருட்களின் விலையேற்றம், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கால்நடைத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd