எதிர்காலத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அரசாங்கத்தில் இருந்து விலக தாம் தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.
உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
செல்போன் கேமிரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு
மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார். மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இந்தியா சென்று பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள லோஸ்லியா மரியநேசன் அண்மையில் வௌியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வௌியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
அவ்வாறான சில புகைப்படங்கள் இதோ
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூடும் அல்லது சுற்றுலாத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிட் 19 சவாலை சமாளிக்க உதவும், என்றார்.
தேவையான பொருட்கள்
இராசவள்ளிக் கிழங்கு - 1
தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப்
தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப்
சீனி - 1 - 11/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
குறிப்பு:
இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - 2 கப் வர வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்.
"ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மோசடியாகவோ அல்லது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவராகவோஅல்ல அவர் ஒரு அரசியல் கைதியாக இருப்பதனால் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்காதது ஏன் " என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காகவும் அவரது மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்