இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற உள்ளன.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க வேண்டியுள்ளார்.
குறித்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கினால் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார் .
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை(10) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
மேலும் 31 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,754 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்று புதிதாக 1259 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.
ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்க அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்கள் உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். புதனுடைய அனுகிரகம் இருந்தால் தான் வருமான தடைகள் நீங்கும். ஒரு சிறு கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய வருமான ரீதியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக, முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும். பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். பகைவர் தொல்லை நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.
மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.
இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி...’ என்ற நிலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று வந்திருக்கிறார்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை இந்தியா இலங்கைக்கு வழங்க வேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் செயற்திட்டத்தை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பித்தது. அதில், இணைந்து கொண்டதன் மூலமே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அவதிப்பட வேண்டி வந்திருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன், இந்தியப் பிரதமருக்கான கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினால் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. 13வது திருத்தத்தை முன்னிறுத்தி ரெலோ ஆரம்பித்த கடிதம் எழுதும் காவடியை தமிழரசுக் கட்சி ஒருவாறாக சமஷ்டிக் கோரிக்கைகள் அடங்கிய கடிதமாகவும் வரைந்து இறக்கி வைத்தது. ஆனால், ரெலோ தூக்கிய 13வது திருத்தம் எனும் காவடியை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பல தரப்புக்களும் இரசிக்கவில்லை. அதனை வெளிப்படையாக எதிர்க்கவும் செய்தன. சும்மா கிடந்த சங்கை ரெலோ ஊதிக் கெடுப்பதாக குற்றஞ்சாட்டின. குறிப்பாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி அதனை பொது வெளியில் விமர்சிக்கவும் செய்தது. ஆனால், கடிதம் எழுதும் விடயம் இந்தியா சார்ந்தது என்ற நிலையில், சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கடிதத்தில் கையெழுத்திட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் அனைவரும் இந்தியாவின் ஏவல் பிள்ளைகள், எஜமானர் என்ன சொன்னாலும், அதனை தலையால் நிறைவேற்றும் அர்ப்பணிப்போடு இருப்பவர்கள்.
13வது திருத்தச் சட்ட விடயத்தை ரெலோ கையிலெடுத்தமைக்குப் அந்தக் கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனின் முதலமைச்சர் கனவு காரணம் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகும் விருப்பம் தனக்கு இருப்பதாக தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் அண்மையில் வெளிப்படுத்தவும் செய்தார். நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான வரைபு விடயத்தில், ரெலோ கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ‘ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி’ என்ற விடயத்தை சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்தனர். அதனை, தென் இலங்கையிலும் தமிழ் மக்களிடமும் சேர்ப்பிக்கும் வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், அப்போது, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி என்ற விடயத்தை படு மூர்க்கமாக எதிர்த்து ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஊடக சந்திப்புக்களை நடத்தினார். புதிய அரசியலமைப்புக்கான வரைவில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் வெளிப்படையாக கூறி வந்தார். ஆனால், இன்றைக்கு அவர்தான், 13வது திருத்தத்தை தூக்கிக் கொண்டு திரிகிறார். சில ஆண்டுகளுக்குள் அவருக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் யாரினால், எப்போது, ஏன் ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது. அதனை அவர் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. மாறாக, தமிழ்க் கட்சிகளை ஒன்றுமைப்படுத்தும் தங்களுடைய செயற்திட்டத்தை சிலர் குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழ்க் கட்சிகள் பொது விடயங்களில் ஒருமித்து செயற்படுவது என்பது அத்தியாவசியமானது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பொது விடயங்களில் செயற்படுவதற்கு கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். மாறாக, வெளிச் சக்திகளினதோ அல்லது குறுநல விடயங்களையோ முன்னிறுத்தி பொது விடயங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்படும் வேலைகளை செய்ய முடியாது. 13வது திருத்தம் என்கிற விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தூக்கிச் சுமக்கப்பட வேண்டிய விடயமல்ல. அதுபோல, அதனை ஏறி மிதிக்க வேண்டிய விடயமும் அல்ல. அப்படிப்பட்ட நிலையில், திடீரென 13வது திருத்தம் என்ற விடயத்தை மக்களின் தலையில் ஏற்றி வைக்கும் விடயம் சந்தேகத்துக்குரியதே, ரெலோவோடு அதற்கு ஒத்துழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதிலளிக்க வேண்டியவர்களே. இந்த இடத்தைத்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிடித்துக் கொண்டது.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முன்னணி கஜன்கள் அணி, மணிவண்ணன் அணி என இரண்டாக பிளவு கண்டது. கஜன்கள் அணி, இரு பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்ட போதும், மணிவண்ணன் அணி யாழ்ப்பாணத்தில் கணிசமான ஆதரவுத் தளத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டது. அதுமாத்திரமல்லாமல், கஜன்கள் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மாநகர சபையையும், நல்லூர் நகர சபையையும் கைப்பற்றியது. அது மாத்திரமல்லாமல், முன்னணியை கட்சியாக பதிவு செய்து அதனை உரிமையாக்கும் வேலைகளிலும் மணிவண்ணன் அணி ஈடுபடத் தொடங்கியது. இது கஜன்கள் அணிக்கு பெரும் பிரச்சினையாக மாறியது. இந்த இடத்தில்தான், 13வது திருத்தம் என்ற சங்கை ரெலோ எடுத்து ஊதா, அதனைப் பிடித்துக் கொண்டது கஜன்கள் அணி. 13வது திருத்தத்துக்கு எதிராக கஜன்கள் அணி, வவுனியாவில் ஆரம்பித்த வாகனப் பேரணியொன்றை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நடத்திய பொதுக் கூட்டத்தோடு நிறைவு செய்தது. கஜன்கள் அணி எதிர்பார்த்த அளவைத்தாண்டிய மக்கள் பங்களிப்பும், ஆதரவும் பேரணிக்கு கிடைத்தது. அது, முன்னணி என்கிற கட்சிக்கான ஆதரவைத் தாண்டி 13வது திருத்தம் என்ற விடயத்தை மேலோ கொண்டு வந்தவர்களுக்கு எதிரானதாக பதிவானது. பேரணி நிறைவில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனைக் குறிப்பிடவும் செய்தார்.
முன்னணியின் 13வது திருத்தத்துக்கு எதிரான பேரணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி, செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சித் தலைவர்கள் ஊடக சந்திப்பை நடத்தியும் இருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மக்கள் கண்டு கொள்ளவே இல்லை. பேரணிக்கான ஆதரவு என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவைத் தாண்டியிருந்த நிலையில், தங்களின் செயற்திட்டத்தை நியாயப்படுத்தும் நோக்கில், ரெலோ அரசியல் கலந்துரையாடலொன்றை எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றது. கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சிகளின் தலைவர்களும், இன்னும் சில அரசியல் ஆய்வாளர்களும் அந்தக் கலைந்துரையாடலில் உரையாற்ற இருக்கின்றார்கள்.
தற்போது அவசியமற்ற ஒரு விடயத்தை பெரும் அரசியல் முனைப்புப் போன்று ரெலோ தூக்கிச் சுமந்ததன் விளைவை அவர்கள் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கிறார்கள். இதில், மாவை சேனாதிராஜாவின் நிலை இன்னும் மோசமானது. அவரை, அவரது முதலமைச்சர் கனவு தொடர்ச்சியாக படுகுழியில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றது. தன்னை ஏனைய கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்பதற்காக அவர், அந்தக் கட்சிகள் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையிலேயே இருக்கின்றார். ஆனால், தமிழரசுக் கட்சி ஒன்றைத் தலைமைத்துவக் கட்சி எனும் நிலையத் தாண்டிவிட்ட நிலையில், அவரது செயற்பாடுகளுக்கு அவர் கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை. 13வது திருத்தம் தொடர்பிலான கடிதத்தில் மாவை கையெழுத்திட்டமை மக்களின் ஆணைக்கு எதிரானது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றசாட்டினார். அதனையே, சுமந்திரனும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கூட மாவை கையெழுத்திட்ட விடயத்தை கேள்விக்குள்ளாக்கினர். இவ்வாறான நெருக்கடியான நிலையொன்றுக்குள் மாவை சிக்கிக் கொண்டிருக்கிறார்.
பதவி ஆசைகளும், பகல் கனவுகளும் தீர்க்கதரினமற்ற தீர்மானங்களை அரசியல் கட்சித் தலைவர்களை எடுக்க வைக்கின்றது. அதனை தடுப்பது மக்களின் தலையாய கடமை. இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலின் இலக்கினை குறு நலன்களுக்குள் புதைத்துவிடுவார்கள். 13வது திருத்தத்தை முன்னிறுத்தி ரெலோ செய்திருப்பது அப்படியான ஒன்றே. அதனைப் புரிந்து கொள்வதுதான், தமிழ் மக்களின் அரசியலைப் பாதுகாக்க உதவும்.
நன்றி - புருஷோத்தமன் தங்கமயில்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அந்த வெற்றிடம் யாழ்மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளது.
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 19 ஆக இருந்த கம்பஹா மாவட்டத்தின்க்ஷபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஆறாக இருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வியாபாரியான 'அபா' எனப்படும் துலான் சமீர சம்பத் கொல்லப்பட்டுள்ளார்.
மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்த போதை பொருள் கடத்தல்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து அனுர வல்பொல நீக்கப்பட்டுள்ளார்.
பணியகத்தின் புதிய தலைவராக டாக்டர் மஞ்சுளா பன்ய்ராசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள்.
தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.