இன்று (18) முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு இருக்காது என அறிவித்த ஆணைக்குழுவின் தலைவர் தானே அறிவித்து சில மணித்தியாலங்களில் இவ்வாறு தெரிவித்தார்.
மின்வெட்டு இரண்டு கட்டங்களாக இருக்கும். முதல் கட்டம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.
அப்போது ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.
இரண்டாம் கட்டம் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும்.
அக்காலப்பகுதியில் 45 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து, அவரை விடுவித்து விடுதலையாக்க விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இதில் 34 வயதுடைய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார் என தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமே தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது.
நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் இவர். அவர் இன்றைக்கு இப்படி சொல்லுவார், நாளை வேறொன்றை சொல்லுவார், அவற்றை எல்லாம் முக்கிய விடயமாக எடுத்து கொள்ள கூடாது என தெரிவித்தார்.
விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது.
தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி என்ஐஏவுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் உள்ள வங்கி கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கி கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கி கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கி கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களை தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்கு சென்ற போது இலங்கை பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தகவலை பெற என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கலைகட்டியுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் களத்தில் இறங்கி கலக்கி வருகின்றனர். அதில் குஷ்பு, உதயநிதி, கமல், சீமான் போன்றவர்கள் முன்னிலை பெறுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தமது அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கினார்.
ஒரு பகுதியில் விஜய் பிரச்சார இடத்தில் வடை சுடுவதையும் வேட்பாளர் போஸ்டருடன் நிற்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சூழலை உருவாக்கவே தனது வீடு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம மறுத்துள்ளார்.
தமக்கு நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது குடும்பத்தினரும் ஏற்கனவே கனடாவிற்குள் நுழைவதற்கான விசாவைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் பின்னணியில் அவர் இருப்பதாக யாராவது சந்தேகம் இருந்தால், விசாரணைக் குழு தேவையான விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதற்கு ஆதரவாக தான் மற்றும் தனது மனைவியின் கைரேகைகள் மற்றும் மொபைல் போன் தரவுகள் விசாரணைக் குழுவிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால் பிரதமருக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என அவர் கூறினார்.
இதற்கிடையில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிகா விக்கிரமசிங்கவுக்கும் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் எம்.பி. மூன்று தடுப்பூசிகளையும் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றார்.
சுஹாசினி மணிரத்னம் இவர் சுஹாசினி என்ற பெயரில் அறியப்படுபவர், தமிழ்த் திரையுலகில் இவர் ஒரு நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக பணியாற்றியுள்ளார். அவர் 1980, நெஞ்சத்தை கிள்ளாதே. தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிந்து பைரவி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், கடுமையான கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 60 சதவீதம் குறைவாக உள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 20 குழந்தை மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்கள் வரையிலான 379 குழந்தையிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது”.
இது குறித்து ஆராய்ச்சியாளர் டெல்மேன் கூறும்போது.
‘தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் கொரோனாவால் அனுமதிக்கப்படுவது 61 சதவீதம் குறைவாக இருந்தது.கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பிறந்தவர்கள். தடுப்பூசி போடாத தாய்க்கு பிறந்த ஒரு குழந்தை இறந்தது.
இளம் குழந்தைகளை பாதுகாக்க தாய் வழி தடுப்பூசி மிகவும் முக்கியமான வழியாகும். தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக கர்ப்ப காலத்தில் எந்த நிலையிலும் தடுப்பூசி போடுவது முக்கியம்” என அவர் கூறினார்.