web log free
December 22, 2024
kumar

kumar

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க சென்ற நிலையில் 12 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது இலங்கை கடற்படையின் அடாவடியை காண்பிக்கிறது என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 410,674,556

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 5,828,531

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 79,293,924

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 942,944

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 27,425,743

பிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 638,124

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 42,614,910

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 508,269

Australian Cricketer Maxwell க்கு எதிர்வரும் March 22ம் திகதி தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.

 5 வருடங்கள் காதலித்து வரும் தமிழ்ப் பெண் வினி ராமனோவுடன் Melbourne Burwood Blackburn Road இல் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருமணம் இடம்பெற உள்ளது. 

இதற்கு முன் Zaheer Abbas, Mohsin Khan, Shoib Malik போன்ற Pakistan வீரர்களும், Glen Turner (NZ) , Mike Brearly (Eng) , Shaun Tait (Aus) Shivnaraine Chanderpaul ( WI) Muralidharan (SL) போன்றோரும் இந்திய பெண்களையே மணந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாடு முழுவதிலும் உள்ள பல கல்குவாரி தளங்களுக்கு கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகள் வெவ்வேறு அளவுகளில்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கல்குவாரிகளுக்கு கொண்டு வரப்படும் வெடிமருந்துகள்  காணாமல் போவது அல்லது தவறான இடத்தில் வைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே, இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு பணியை தொடங்க அரசுக்கு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, லியங்கஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கல்குவாரி ஒன்றுக்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட அளவோடு ஒப்பிடும் போது, ​​அதில் எவ்வித வெடிப்பும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அதிகளவு வெடிமருந்துகளுக்கு என்ன ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற சம்பவங்கள் மற்ற பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன்னரும் இவ்வாறு வெடிமருந்துகள் காணமல் போனமை குறிப்பிடத்தக்கது. 

 

பிரபல இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கும், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உட்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ள வினய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதை நடிகர் பிரேம்ஜி அமரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை. இருந்திருந்தால் 10 வருடத்துக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன். என் வாழ்வில் திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார்.

 

2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கி நடந்துவந்தது. இலங்கை வீரர் ஹசரங்கா ஏலம் நடந்துகொண்டிருக்கும்போது ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் மேடையிலேயே மயக்கமடைந்ததையடுத்தால் தடைபட்டது. பின்னர் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு, எட்மீட்ஸ்க்கு பதிலாக சாரு ஷர்மாவை ஐபிஎல் நிர்வாகம் புதிய ஏலம் நடத்துபவராக அறிவித்தது.

அதிகபட்ச விலைக்கு ஏலம் போன இரண்டாவது வீரர்:


இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா பிடித்துள்ளார். இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ரூ.1 கோடி அடிப்படையில் தொடங்கிய இவரின் தொகை இறுதியாக ரூ.10.75 கோடியில் முடிந்தது. கடந்த சீசனில் இவரை எடுத்திருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியே இந்தமுறையும் இத்தனை கோடி கொடுத்து எடுத்தது.

தமிழக வீரருக்கு டிமான்ட் :

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அடுத்ததாக ஏலம் விடப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். அடிப்படை விலையான ரூ.1.50 கோடி தொடங்கிய அவரின் ஏலத் தொகை ரூ.8.75 கோடியில் முடிந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை எலாம் எடுத்தது.

லக்னோ அணியில் குர்னால் பாண்டியா:

இந்திய அணி ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் இவரை எடுக்க ஆர்வம் காட்ட, பின்னர் குஜராத் அணியும் போட்டியில் இறங்கியது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அவரை எடுத்து.

ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...

> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (​குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)

2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:

> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவலர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ராமேசுவரத்தில் தீவிர ரோந்து பணியை போலீஸார் மேற்கொண்டனர்.


ராமேசுவரம் பேருந்து நிலையம்அருகே போலீஸாரைக் கண்டதும்தப்பி ஓட முயன்ற 5 பேரைச் சுற்றிவளைத்து பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ கோக்கைன் எனும் கொடிய போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.


தொடர்ந்து போலீஸார் நடத்தியவிசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தியைச் சேர்ந்த சூர்யகுமார் (27), பாம்பனைச் சேர்ந்த மனோஜ் (20), சாதிக்(36), ராமேசுவரத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (32), அங்குராமர் (36) எனத் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சரகம் காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராமேசுவரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (31), பாம்பனைச் சேர்ந்த சம்பத்ரேமண்ட் (23), ஜோசப் பாஸ்டின்குமார் (23), ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கோக்கைன் போதைப் பொருளை மதுரையில் இருந்து பேருந்து மூலம் ராமேசுவரம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.

ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த ராஜபக்ச மட்டுமே நன்றியுடையவர் எனவும் குடும்பத்தின் சிறப்பை அறிந்தவர் எனவும் பசில் ராஜபக்சவின் தகுதி தெரிந்ததால் அவர் பற்றி பேசக்கூட விரும்பவில்லை எனவும் நாரஹேன்பிட்டி அபயராம பீடாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முன்வந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மீது அவதூறு பரப்புவது நன்றிகெட்ட செயல் என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சமன் ரத்னபிரிய அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ரத்னபிரிய ஒரு பாம்பு எனவும் அவர் கூறுகிறார்.

இணையத்தளமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையாக எழும் உணர்வும் கூட. பசி, தாகம் போல காதலும் நமக்கான உணர்வுதான். அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா...
தக்காளி -காதலுணர்வையும், பாலுணர்வையும் தூண்டக்கூடிய சத்துக்கள் இதில் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

கிவி- இதில் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பேறுக்கு திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்கு சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

லெட்யூஸ்- முட்டைகோஸ் போன்ற தோற்றமுடைய இது பல வகை வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியது. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும். காதல் உணர்வை தூண்டும்.

பட்டாணி- ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய இது மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளை போக்கும் தன்மை உண்டு. இதுவும் அந்த வகையை சேர்ந்ததுதான். மனச்சோர்வை குறைப்பதுடன், காதல் உணர்வுக்கும் வழி அமைத்துக் கொடுக்கும்.

மாதுளை -மாதுளையைப் பழமாகவோ, ஜூஸாகவோ தொடர்ந்து அருந்தி வர, ஆண்களின் உடல் வலிமை பெறும். காதலுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்க்கைக்கும் மிகவும் ஏற்றது.

டார்க் சாக்லேட்- செரோட்டொனின் என்ற ஹார்மோனை தூண்டுவதில் டார்க் சாக்லேட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தை அளித்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வை சீராக தூண்ட உதவும்.

காபி-காபியில் உள்ள காபின் தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.

தர்பூசணி- இந்தப் பழத்தை, ‘நேச்சுரல் வயாகரா’ என சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களை தர வல்லது.

ஆப்பிள்- ஆப்பிளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பாலி பீனால்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் ஆகியவை காதல் உணர்வை தூண்டக்கூடியவை. உடலுக்கு அதிக சக்தியை தரக்கூடியவை. இது, திருமணமான பெண்களுக்கு மிகவும் நல்லது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஈபிஎப் மற்றும் ஈடிஎப் மீதான வரிக்கு தனது எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சாந்த பண்டார " முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் கட்சியின் மத்திய மற்றும் நிர்வாகக் குழுக்கள் கூடி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யும் எனத் தெரிவித்தார் .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd