இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கடந்த 18-ந் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடைந்தது. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் பிரதமர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர் அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.' என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று போதியளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் டீசல் மற்றும் பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாகவும், தரையிறங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் பணம் செலுத்திய மற்றொரு கப்பல் கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே பெட்ரோல், டீசல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
அடுத்த பத்து நாட்களில் மேலும் மூன்று எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்று வயிற்றில் இருந்த சிசுவையும் கொன்ற கணவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வயிற்றில் இருந்த குழந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை அகற்றப்பட்டது.
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகிய பின்னர் ஜி.எல்.பீரிஸ் போன்ற ஒருவர் பிரதமராக வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்சக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரை தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும், எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 22 மற்றும் 29ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், மே 22 முதல் ஜூன் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் நான் தாக்குவதற்கான காரணம் 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு தற்போது அவர் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவராக காணப்படுகின்றார் அவரால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி தனது உரையில் தெரிவித்தார்
மேலும் உரையாற்றுகையில்
அவர் இன்று ராஜபக்ஷ குடும்பத்தினால் கைதியாகக்கப்பட்டுள்ளார் இந்த கைதியை விடுதலை செய்ய வேண்டும் அவர் இன்று தனி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பிரதமர் பதவியில் உள்ளார்.
அதே போன்று கடந்த காலத்தில் நான் கூறியது போன்று மீண்டும் கூறுகின்றேன் கிழக்கு மாகாணத்தில் உள்ள உறுப்பினர்கள் அமைச்சு பதவி எடுத்தால் குறுகியகாலத்தில் அமைச்சு பதவி வகித்தவர்களாக இருபீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் 30 இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சரவையில் பதின்மூன்று பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதோடு மேலும் 12 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
முன்னதாக, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை அல்லவென அவர் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சியுடன் இணைந்து நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அமைச்சுப் பதவிகளை இன்று (20) காலை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முழு விபரம் வருமாறு,
சுசில் பிரேமஜயந்த - கல்வி
விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி
மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம்
நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து
நளின் பெர்னாண்டோ - வர்த்தகம்