web log free
July 01, 2025
kumar

kumar

இலங்கை விமானத்தில் கடத்தி வரப்பட்ட பழங்கால நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இரண்டு இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள், மிகவும் பழமையான நாணயங்களை மறைத்து வைத்திருந்தனர். அதுபற்றி கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். மிகவும் பழமையான அந்த நாணயங்களின் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது. அவை விலை மதிப்பில்லாதவை என அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினர், அவர்களிடம் இருந்த 12 பழங்கால நாணயங்களை  பறிமுதல் செய்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த நாணயங்களை இவர்களிடம் கொடுத்தது யார், சென்னையில் யாரிடம் கொடுக்க வந்தனர் என அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கடவத்தை எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இவர் முச்சக்கர வண்டி சாரதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த அவர், தவறிவிழுந்து மயங்கிமடைந்ததாகவும், உடனடியாக அவர்  ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், இது இரண்டாவது மரணம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம். இந்த வி​லை அதிகரிக்கு இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் ரோஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்வதி (70). இவரது மகன் ராம் நரேஷ் (35). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ராம் நரேஷ் தனது தாயிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ராம்வதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் ராம்வதியை அடித்து தாக்கியுள்ளார். இதில் ராம்வதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், ராம்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட ராம் நரேஷை கைது செய்தனர்.

மதுபானத்திற்காக தாயையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) மாலை நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.

குறிப்பிட்ட கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ´நெனோ´ உர தட்டுப்பாடு நிலவினாலும் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவித்து அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன் போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (03S – 11N, 886E – 96E) மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
 
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.

புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நியமிக்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இவ்வாறான மென்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு தழுவிய போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், விரும்பினால் ஹிட்லராக மாறி அவ்வாறு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd