web log free
September 03, 2025
kumar

kumar

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக காலிமுகத்திடலில் இடம் ஆர்ப்பாட்டங்களில் ஓமல்பே சோபித தேரர் இணைந்துகொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு பௌத்தமதகுருமாருடன் வந்த ஓமல்பே சோபிததேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சிலாபம் சென்று புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலாபம் நகர சபை உறுப்பினரும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கண்டியைச் சேர்ந்த இருவருமாக ஆறு பேர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும், ஆராய்ச்சிக்கட்டுவ மானாவெரிய பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை அடுத்து குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்து இருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, இரண்டு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்து புதையல் பூஜையைச் செய்துள்ளார்.

அவர்களை சுற்றி வளைத்த பொலிஸார் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றைத் தடய பொருட்களாக மீட்டதுடன், அங்கிருந்த ஆறு பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் கோட்டாபயவுக்கு ஆதரவாகவும் ஆங்காங்கே சிறிய போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றய தினம் கேகாலையில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டாபயவுக்கு ஆதரவாக போராட்டம் 10 நிமிடங்களிலேயே கலைக்கப்பட்டது.

"பெற்றோல் இல்லை" எனப்பரவும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
இதுவரை நாடுபூராவும் உள்ள 1222 பெற்றோலிய நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரவிக்கப்படுகிறது.
 
இம்மாதம் கடந்த பதினொரு நாட்களுக்கு மட்டும், ஒரு நாளைக்கு பெற்றோல் மெற்றிக் தொன் 4200 படி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டு உள்ளது.
 
இதனிடையே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10000 லீட்டர் எரிபொருள் தற்போது பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக இன்று நான்காவது நாளாகவும் காலி முகத்திடலில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கேற்ற ரப் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 போராட்டத்தில் கலந்துகொண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த பாடகர் ஷிராஸ் யூனுஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலி முகத்திடலில் உயிரிழந்த இவர், 1995ஆம் ஆண்டு தொடக்கம் சகோதரமொழியிலான ரப் பாடல்களைப் பாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இன்று அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களுக்காக ஆங்காங்கே புல், புண்ணாக்கு மற்றும் தவிடு நீர் போன்றவை பிரதேசவாசிகளால் வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராஜபக்ச அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார். 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலில் தங்கியிருந்து போராட தயாராகின்றனர். 

கடனில் சிக்குண்டுள்ள நாட்டின் அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக நேற்று அவரது அலுவலகத்தின் வாயிலை ஆக்கிரமித்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குடை ரெயி;ன்கோர்ட்டுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

சிலர் இளம் தலைமைத்துவத்திற்கு வழிவிடுவதற்காக முழு நாடாளுமன்றத்தையும் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார்.  ராஜபக்ச குடும்பம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்இன கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான இறுதிபோரில் போரிட்டதாக புஸ்பகுமார தெரிவித்தார்.

இரண்டரை தசாப்தகாலத்தின் பின்னர் இந்த யுத்தத்தில் இலங்கை படையினர் வென்றனர். அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ராஜபக்சவும் ஜனாதிபதியாகயிருந்த அவரது மூத்த சகோதாரரும்( தற்போதைய பிரதமர்) வெற்றிக்கான பெயரை பெற்றனர்.

நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம், பொதுமக்களின் பணத்தை மீட்போம், அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என புஸ்பகுமார தெரிவித்தார்.

நாங்கள் காப்பாற்றிய நாட்டை இவர்கள் அழிக்கின்றனர். இராணுவம் பொலிஸார் அவர்களை பாதுகாப்பது கவலையளிக்கின்றது என புஸ்பகுமார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவாளர்கள் உணவு தேநீர் ரெயின்கோட் போன்றவற்றை விநியோகம் செய்தனர்.

25 பில்லியன் கடனில் சிக்குண்டுள்ள தென்னாசிய நாடு வங்குரோத்தாகும் நிலையில் உள்ளது. இந்த வருடம் மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைவடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. உணவு எரிபொருளிற்காக அரசாங்கம் சீனா இந்தியாவிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றம் அதிகளவிற்கு இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானதாக காணப்படுகின்றது.

இதேவேளை எந்த வருமானத்தையும் ஈட்டித்தராத கொழும்புதுறைமுக நகரம் போன்றவற்றை உருவாக்குவதற்கான நிதிக்காக ராஜபக்ச குடும்பம் பெருமளவு கடன்களை பெற்றது. சீன கடன் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

35 வயது வர்த்தகரான எஸ்டி பிரகீத் மதுஸ் இரவு ஆர்ப்பாட்டக்காரர்களுடனேயே தங்கியிருந்தார்.

மக்கள் விலகுங்கள் என தெரிவிக்கும் போது நீங்கள் ஜனநாயக ரீதியில் விலகவேண்டும், மக்கள் தற்போது அவரை ( ஜனாதிபதியை) விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு விலகிச்செல்வதற்கு விருப்பமில்லை – அதிகாரத்தை கைவிட விருப்பமில்லை என மதுஸ் தெரிவித்தார்.

நான் இங்கேயே தங்கியிருக்க போகின்றேன் எங்கள் பிள்ளைகளிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்றால் நாங்கள கஸ்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd