web log free
September 21, 2024
kumar

kumar

உங்களை மதிக்கும் SDB வங்கியானது, இப்பண்டிகைக் காலத்தில் SDB லக்தறு குழந்தைகள் சேமிப்பு கணக்கினை மேம்படுத்துவதற்காக எண்ணிய பிரச்சாரத்தினை வெளியிட்டுள்ளது.

“எங்கே எனது நத்தார் தாத்தா” எனத்தலைப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சாரமானது, நீண்ட காலத்திற்கு நிலைத்துநிற்காத விளையாட்டுப் பொருட்களிலும் பரிசுப்பொருட்களிலும் செலவழிப்பதினை காட்டிலும் அவர்களது குழந்தைகளது எதிர்காலத்திற்காக பணத்தினை சேமிப்பதற்கு பெற்றோர்களை ஊக்குவிப்பதாக அமைகின்றது.

கிறிஸ்துமஸ் என்பது மகிழ்விற்கும் கொண்டாட்டத்திற்குமான காலம் எனினும் இதுவே செலவழிப்பதற்கும் விரயமாக்குவதற்குமான காலமாகவும் காணப்படுகின்றது. பல பெற்றோர்கள் நீடித்த பாவனையற்றதும் எந்தவொரு கல்விப் பெறுதியுமற்றதுமான விளையாட்டுப் பொருட்களையும் பரிசுப் பொருட்களையும் தங்களதுபிள்ளைகளிற்கு வாங்கித்தரவே எண்ணுகிறார்கள்.

ஆகவே, இப்பண்டிகைக் காலத்தில் உங்களது குழந்தைகள் மீதான அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த சிறந்தவொரு வழி காணப்படுவதளை பெற்றோருக்கு நினைவுப்படுத்த இதுவொரு முக்கியமான காலமென SDB வங்கி அடையாளப்படுத்தியுள்ளது.

SDB லக்தறு என்பது -உயர் வட்டி வீதம் மற்றும் அவர்களது கல்வி, சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சி என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் நன்மைகளது தொடராகவுமான- சிறந்த இரு உலகங்களை உங்களது பிள்ளைகளிற்கு வழங்குமொரு சிறுவர் சேமிப்பு கணக்காகும். ளுனுடீ லக்தறுவுடன், சிறு வயதிலிருந்தே சேமிப்பு பழக்கத்தினையும் நிதியியல் திறன்களையும் உங்களது பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள உதவ உங்களால் முடியுமென்பதுடன் அதேசமயத்தில் பரிசுகள், வவுச்சர்கள், காப்புறுதி, மற்றும் புலமைப்பரிசில்கள் போன்ற கவர்ச்சிகரமான வெகுமதிகளையும் அனுபவித்திடுங்கள்.

SDB லக்தறுவானது சிறுவர் சேமிப்புக் கணக்குகளிற்கு சந்தையில் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குவதுடன் உங்களது பிள்ளையின் எதிர்காலத்திற்கான திறன்மிக்க தேர்வாகவும் இதனை உருவாக்கியுள்ளது. உங்களது பிள்ளைகளும் கூட அவர்களை அதிகமாக சேமிக்க ஊக்குவிக்கவும் அவர்களது சாதனைகளை கொண்டாடவுமாக அவர்களது சேமிப்பு நிலுவையின் அடிப்படையில் பரிசில்களையும் வவுச்சர்களையும் பெறுவார்கள். SDB லக்தறுவானது கணக்கு நிலுவையின் அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு வைத்தியசாலை காப்புறுதியினை வழங்கி, ஏதேனும் மருத்துவ அவசரகாலப் பகுதியில் தங்களிற்கு மனநிம்மதியினையும் நிதிப் பாதுகாப்பினையும் வழங்குகின்றது.

அத்துடன் உங்களது பிள்ளை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையின் அதி சிறந்த பெறுபேற்றுக்காரரெனில், அவர்களது கணக்கு நிலுவையின் பிரகாரம் அதிக நன்மைகளை வழங்கும் கவர்ச்சிகரமான வெகுமதி திட்டங்களிற்கு தகுதியுடையவர்களாவார்கள். SDB லக்தறுவானது ஒரு சாதாரண சேமிப்பு கணக்கல்ல; இது உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்குமான பங்குதாரர் ஆகும். SDB வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர், ஹசித சமரசிங்க அவர்கள் இப்பிரச்சாரமானது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை பாரியளவில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

“சிறுவர்களுக்கென SDB லக்தறு சேமிப்பு கணக்கினை ஆரம்பிப்பதன் மூலமாக அவர்களது குழந்தைகளது எதிர்காலத்தில் முதலிடுவதற்கு பெற்றோர்களை ஆகர்சிக்க நாம் விரும்புகின்றோம். இவ்வழியில், அவர்களது பிள்ளைகளிற்கான பாதுகாப்பானதும் பிரகாசமானதுமானவொரு எதிர்காலம் அவர்கள் முன் காணப்படுகின்றது என்பதனை அவர்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அவர்களது பிள்ளைகளது வாழ்விற்கு எவ்வித பெறுமதியும் சேர்க்காத அனாவசிய செலவுகளை தவிர்க்கவேண்டிய செய்தியையும பகிர்ந்துக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். எமது பிரச்சாரமானது எமது இலக்கு வாடிக்கையாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் செயலில் இறங்க அவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் நாம் நம்புகின்றோம்.” என்றார்.

எண்ணியப் பிரச்சாரமானது யூ டியுப், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட எண்ணிய சமூக அலைவரிசைகளில் டிசெம்பர் மாத இறுதிவரையில் இடம்பெறும். வங்கியானது அதனது வாடிக்கையாளர்களுடனும் சாத்தியமான வாடிக்கையாளர்களுடனும் பங்குகொள்வதற்காகவும் SDB லக்தறு சிறுவர் சேமிப்பு கணக்கின் எதிர்காலத்திலான நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இடைவினை செயற்பாடுகள் மற்றும் போட்டிகளையும் நடாத்தவுள்ளது.

26 வருடங்களிற்கும் மேலாக இலங்கை மக்களிற்காக சேவையாற்றும் SDB வங்கியானது, அதனது வாடிக்கையாளர்களிற்கும் பொது மக்களிற்கும் சேமிப்பின் அவசியத்தை நினைவுறுத்துவதுதற்கு, விசேடமாக நாடு அனுபவித்துக்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்கள் நிறைந்த இந்நிலையானது, முக்கியமான தருணமென்பதை நம்புகின்றது. வங்கியானது, நிலைபேண் நிதியியல் மற்றும் சமூக பொறுப்புணர்வு, அதேப்போல் தனியார் மற்றும் வர்த்தகம் என இரு தரப்பினருக்கும் வசதியளிக்கும் நவீனமானதும் பொருத்தமானதுமான வகைப்பட்ட தயாரிப்பு மற்றும் சேவைகளிலுமாக அதனது அரப்பணிப்புக்களையும் முன்னிறுத்தி காட்டவும் விளைவின்றது.

மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளை உடனடியாக நிறுத்தி மக்களின் அபிவிருத்தியில் தலையிடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.

ஆளுநர்களுக்கும், அரசியல் அதிகாரங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாகவும், சகல வேறுபாடுகளையும் களைந்து, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்வதாகவும் தனக்கு எப்போதும் முறைப்பாடுகள் வருவதாகவும் பிரதமர் இங்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடிக்கவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களாக நான்கு நபர்களை பரிசீலித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது பரிசீலிக்கப்படும் வேட்பாளர் பட்டியலில் இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மிகவும் பொருத்தமான வேட்பாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம், ஜனாதிபதி தேர்தலில் வலுவான போட்டியை காண்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18000 சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். 

சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நாலக கொடஹேவாவுக்கு கம்பஹா மாவட்டத்திலும், டிலான் பெரேராவுக்கு பதுளை மாவட்டத்திலும், வசந்த யாப்பா பண்டாரவுக்கு கண்டி மாவட்டத்திலும் தொகுதி அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. எல். பீரிஸுக்கும் கட்சியில் பதவி வழங்கப்படவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைப்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவசர தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளின் கூட்டிணைவாக இதைச் செய்து வருகிறார். பலர் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், இக்கட்டான காலங்களில் ஒரு நாட்டில் அராஜகத்தை நடத்துவதற்கு இத்தகைய குணங்கள் கொண்டவர்கள் மிகக் குறைவு என்றார். 

கடும் மழை காரணமாக வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மழையினால் அந்தந்த மாகாணங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல அரச பாடசாலை கட்டிடங்களில் நலன்புரி முகாம்கள் நடாத்தப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காசல்ரி நீர்தேக்க பகுதிகளில் (18ஆம் திகதி) பெய்த கடும் மழையுடன், காசல்ரி நீர்த்தேக்கம் (19ஆம் திகதி) நிரம்ப ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கமைவாக களனிகாவின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதரவை வழங்குமாறு அனைத்து அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சி என்ற ரீதியில் இவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பெரமுன கூறுகின்றது. 

அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால், நிறைவேற்று சபையை கூட்ட வேண்டும் எனவும், கடந்த சனிக்கிழமையின் பின்னர் நிறைவேற்று சபை கூடவில்லை எனவும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.