web log free
December 23, 2024
kumar

kumar

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கொழும்பு  போராட்டத்தில் சில பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் காயம் ஏற்பட்டதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா உறுதிப்படுத்தினார்.

அதேவேளை சமகி ஜன பலவேகய (SJB) கட்சியினரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"சம்பவத்தில் சில பொலிசார் காயமடைந்தனர், ஆனால் நான் இன்னும் அறிக்கையைப் பெறுகிறேன்," என்று தல்துவ கூறினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட ஐந்து கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எனினும் எந்தவொரு அரசியல்வாதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலரை சஜித் நேரில் சென்று பார்வையிட்டார். 

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பராசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பராசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பராசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் சிறிலங்கா விமானப்படையின் இரண்டு பராட்ரூப் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பராட்ரூப் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் சந்தேகநபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் அரச வருமானத்தை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மறைமுக வரிகளை அறிமுகப்படுத்துவதற்கோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிப்பதற்கோ எந்த நம்பிக்கையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி என்பது குறிப்பிட்ட தொகை என்றும் அமைச்சர் கூறினார்.

76வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை தினங்களில் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், வீதிகளை மூடுதல் மற்றும் மாற்று வழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை மையமாக வைத்து இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயிற்சிக்கு முந்தைய நாட்களில் (ஜன. 30 - பெப். 3) காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், சுதந்திர தின விழாவிற்கு பெப்ரவரி 3ம் திகதி மதியம் 2:00 மணி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை நிகழ்ச்சி முடியும் வரை மாற்று போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும். 

மக்கள் வங்கி, ஏற்றுமதிகளுக்கான சர்வதேச சந்தைகளைக் கைப்பற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு உதவ '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்த்துள்ளது. 

ஒரு முன்னணி அரச வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை தெளிவாக இனங்கண்டுள்ளது.

அதற்கமைவாக, சர்வதேச சந்தைகளில் எழுகின்ற வாய்ப்புக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நிதியியல் சார்ந்த மற்றும் நிதியியல் சாராத உதவிகளை வழங்குவதற்காக ஏற்றுமதித்துறை குறித்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக மையங்களை (ஏற்றுமதி மையங்கள்) ஸ்தாபித்து, புதுமையான கோட்பாடொன்றை வங்கி 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்த முயற்சியின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் துறைக்கு ஏற்றுமதிக்கு முன்னரான நிதி வசதிகள், ஏற்றுமதிக்குப் பின்னரான நிதி வசதிகள், ஆலோசனை சேவைகள், விசேட இணைய வங்கிச்சேவைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் ஏற்கனவே ஐந்து ஏற்றுமதி மையங்களை வங்கி ஸ்தாபித்துள்ளது.   

ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற வங்கியின் இலக்கினை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய அணியொன்று பாஹ்ரென் தேசிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திச் சபையின் மூலோபாய முன்னெடுப்பான ‘EXPORT BAHRAIN’ சந்தித்திருந்தது.

பாஹ்ரெனில் உள்ள வணிகங்கள் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் வணிக வாய்ப்புக்களை அணுகுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுகின்ற தனித்துவமான தீர்வுகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றை வழங்குவதனூடாக பாஹ்ரெனை தளமாகக் கொண்ட வணிகங்களின் ஏற்றுமதி வாய்ப்புக்களை மேம்படுத்தி, உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பே ‘EXPORT BAHRAIN’ ஆகும்.  

'‘EXPORT BAHRAIN’' பிரதம நிறைவேற்று அதிகாரி சாஃபா ஷரீஃப் ஏ. காலிக் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்கள் பிரிவின் ஸைனாப் மட்ரூக் ஆகியோர் 2024 ஜனவரி 8 ஆம் திகதியன்று மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர்  கிளைவ் பொன்சேகா ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாஹ்ரெனிலுள்ள இலங்கைக்கான தூதுவரான எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. விஜேரத்ன மென்டிஸ் அவர்களின் முயற்சியால் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மக்கள் வங்கியின் தொழில்முயற்சி வங்கிச்சேவைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையில் தேயிலை, கறுவா, ஆடையணி, அலங்கார மலர்கள், பதனிடப்பட்ட உணவு, வாசனைத் திரவியங்கள், தேங்காயை மூலமாகக் கொண்ட உற்பத்திகள் அடங்கிய ஏற்றுமதித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களான வாடிக்கையாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பாஹ்ரென் மற்றும் இலங்கை நாடுகளிடையே வாணிப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து, ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு மிகவும் பயன்மிக்க கலந்துரையாடலில் அவர்கள் ஈடுபட்டனர். 

ஏற்றுமதி நிதி வசதி, ஏற்றுமதி கடன் காப்புறுதி, சர்வதேச புள்ளிவிபரங்களுக்கான அணுகல், நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சந்தை நுண்ணறிவு, ஏற்றுமதி அனுசரணைகள், விசேட அறிவுபூர்வமான கருவிகள், மூலோபாய மதிப்பீட்டுக் கருவிகள் போன்ற முக்கிய துறைகளில் குறிப்பிட்ட உதவிகளை வழங்குவதனூடாக சர்வதேச வாய்ப்புக்களுக்கான கதவுகளைத் திறப்பதற்கு நுஒpழசவ டீயாசயin வழங்கும் ஏற்றுமதி இலக்குடனான தீர்வுகளை சாஃபா ஷரீஃப் அவர்கள் வலியுறுத்தியதுடன், இந்த முயற்சிகளினூடாக வெற்றிகரமான ஏற்றுமதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான படிகளை உள்ளடக்கி சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நுண் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு 'நுஒpழசவ டீயாசயin' எவ்வாறு உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.   

சிறிய மற்றும் நடுத்த அளவிலான வணிகங்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைகளுக்கு அமைவாக ‘EXPORT BAHRAIN’ எவ்வாறு தீர்வுகளைத் தோற்றுவிக்கின்றது என்பதையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பொறுத்தவரையில் எப்போதும் மாற்றங்கண்டு வருகின்ற ஏற்றுமதிச் சந்தைப் போக்குகள் மற்றும் ஒழுங்குமுறைகளை காலத்திற்கு அமைவானதாக உள்வாங்குவதற்கு எவ்வாறு இது உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.

தொழில் முயற்சியாளர்கள் பலருக்கும் தமது உற்பத்திகளுக்கு நிலைபேணத்தகு சர்வதேச சந்தையைக் கண்டறிவது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் நிலையில், வங்கியில் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள மற்றும் புதிதாக வாடிக்கையாளர்களாக மாறுகின்ற ஏற்றுமதியாளர்களுக்கு பாஹ்ரென் சந்தையில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை வளர்த்துக் கொள்வதற்கு பெறுமதிமிக்க உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்ப்பதற்கு மக்கள் வங்கி திட்டமிட்டுள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்பில் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் கைகோர்த்தார்.

மூன்று தசாப்த கால கொடிய எல்.ரீ.ரி.ஈ பயங்கரவாத யுத்தத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான பணியை வழிநடத்திய ஒரு தளபதி போலவே இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதியுமான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமித்தார்.

 

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரபாத் மாதரகேவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

தற்போது மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பணிப்பாளராக பிரபாத் மாதரகே கடமையாற்றி வருகின்றார்.

ஏசியன் மிரர் இணையத்தளத்தில் செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மீடியா செயற்பாடுகள் மற்றும் இணைய ஆசிரியராக பணியாற்றிய அவர் ஜனாதிபதி அலுவலகம் உட்பட பல தனியார் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் பதவிகளை வகித்து அனுபவம் வாய்ந்த மற்றும் முதிர்ந்த ஊடக நிர்வாகியாவார்.

பிரபாத் மாதரகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்து கணனி விஞ்ஞானம் மற்றும் இலத்திரனியல் ஊடக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்றுள்ளார்.

இவர் ஹோமாகம மகா வித்தியாலயம், ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஹொரணை றோயல் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். 

இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் முன்னணி நிறுவனமான சந்தனாலேப, அதன் ஆயுர்வேத குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதன் மூலம், தனது 30 ஆண்டுகால பயணத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை கொண்டாடுகின்றது.

சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் வெளியீடுட்டு விழா, வியாங்கொடையில் உள்ள நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.

நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இவ்வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை, Sanjeewaka Ayurvedic Products Pvt Ltd தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமதிலக இங்கு எடுத்துக் கூறினார்.

அவர் தெரிவிக்கையில், "நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு பாத்திரமாக சந்தனாலேப விளங்குகின்றது. எமது புதிய குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம், ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளை அரவணைப்பதில் பெருமிதம் கொள்ளும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, அந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் காலத்தால் அழியாத ஆயுர்வேத ஞானத்தால் ஈர்க்கப்பட்ட எமது நிபுணத்துவத்துவம் மூலம், குழந்தை பராமரிப்பின் தரநிலைகளை மீள்வரையறை செய்யும் தெளிவான தூர நோக்குடன், இந்த புதிய தயாரிப்பு வகைகளில் சந்தனாலேப நுழைகிறது. சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், எதிர்வரும் நாட்களில் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்றார்.

சந்தனாலேப குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளில் பேபி சோப், பேபி க்ரீம், பேபி கொலோன் ஆகியன உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் நம்பகமான ஆயுர்வேத மூலப்பொருட்களின் சாரத்துடன் உரிய கலவையுடன், குழந்தைகளுக்கு உகந்த ஆறுதலையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. பேபி சோப் வகைகளில் மில்க் அன்ட் ஹனி பேபி சோப், கொஹொம்ப அன்ட் வெனிவெல் சோப், ரத்மல் அன்ட் பொக்குருவாட பேபி சோப் போன்ற வகைகள் காணப்படுகின்ன. சந்தனாலேப பேபி க்ரீம் ஆனது, பால் மற்றும் தேனின் நலன்களை கொண்டுள்ளது. அத்துடன் அதன் கொலோன்கள், சந்தன மரத்தின் நம்பகமான நறுமணம் உட்செலுத்தப்பட்டதாக காணப்படுகின்றன.

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் சந்தையில் ஒரு முன்னோடியாகவும், 100% இலங்கை வர்த்தக நாமம் எனும் பெருமையுடனும் உள்ள சந்தனாலேப, பெற்றோர்-குழந்தை பந்தத்தின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தை பராமரிப்பு உற்பத்தி வகைகளில் காணப்படும் அதன் ஒவ்வொரு தயாரிப்பும் இந்த உறவை மேம்படுத்தவும், மென்மையான தருணங்களை உருவாக்கவும், குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்யவுமாக மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனாலேப தனது குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை, பரபேன் மற்றும் சல்பேட் அற்றவையாக பேணுவதோடு, உலகளாவிய IFRA நறுமண தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. அதன் அனைத்து உற்பத்திச் செயன்முறைகளும், ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22716, Cosmetic GMP சான்றிதழ் உள்ளிட்ட மிக உயர்ந்த தரங்களை பேணுகின்றன.

1948 ஆம் ஆண்டு, வியாங்கொடையில் உள்ள பிரபல ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் ஆர்.டி.பி. ஜயரத்ன இந்த வர்த்தக நாமத்திற்கு அடித்தளமிட்டதைத் தொடர்ந்து, சந்தனாலேபவின் பாரம்பரியம் ஆரம்பமானது. அந்த வகையில் இன்று, இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் முன்னோடியாக விளங்கும் சந்தனாலேப, சிறந்த அழகுசாதன வர்த்தகநாமமாகவும், நாட்டின் மிகப்பெரிய ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளராகவும் பரிணமித்துள்ளது. பாரம்பரிய ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை இணைத்து, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறையில் சந்தையில் ஒப்பிட முடியாத தலைவராக சந்தனாலேப விளங்குகின்றது.

தரம் மற்றும் சிறப்பிற்காக அது கொண்டுள்ள அர்ப்பணிப்பு மூலம், சந்தனாலேப தயாரிப்புகள் நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் பாரம்பரிய ஞானத்தை உள்ளடக்கியது. பேபி க்ரீம் மற்றும் பேபி கொலோன் வழங்கும் இனிமையான அரவணைப்பு முதல் குழந்தை சோப்புகளில் காணப்படும் தூய்மைப்படுத்தும் மென்மையான தொடுகை வரை, ஒவ்வொரு தயாரிப்பும் பெற்றோருக்கான உங்கள் பயணத்தில் நம்பகமான பங்காளியாக இருக்கும் எனும் வாக்குறுதியை அது பிரதிபலிக்கிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd