web log free
July 05, 2025
kumar

kumar

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11ஆம் திகதி) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் பேலியகொட, வத்தளை, ஜா அல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், களனி, பயகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட, உள்ளுராட்சி சபை பகுதி மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் செயற்குழு கூட்டங்கள் கடந்த சில நாட்களாக பத்தரமுல்ல வோட்டர்சேஜ் ஹோட்டலில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, நிமல் லான்சா மற்றும் ஜனாதிபதி தேர்தல் செயற்குழுவின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் விசேட அம்சம் என்னவெனில், குறித்த விடுதியின் தனி இரகசிய அறையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் வந்து பல அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு சஹாப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஹோட்டல் கார் பார்க்கிங்கில் தங்களுடைய பாதுகாவலர்களை நிறுத்தி ரகசிய அறைக்கு கூட சென்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இந்த அரசியல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கிய சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன்படி இருவரும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளை இழக்கின்றனர். 

ஐக்கிய மக்கள் கூட்டணி அங்குரார்பண  கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்த நிகழ்வு இன்று(08) முற்பகல் நடைபெற்றது. 

ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான உடன்படிக்கை இதன்போது கைச்சாத்திடப்பட்டது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியில் 8 முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 

அதற்கமைய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், சுதந்திர மக்கள் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற குழுத் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், 

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைர் டலஸ் அழகப்பெரும, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பிரஜைகள் குரல் மக்கள் இயக்கத்தின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் E.L.B.சமீல், முற்போக்கு தமிழரசு கட்சியின் செயலாளர் விஜேசுந்தரம் ரமேஷ், திவிதென ரணவிரு அமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு ஆகியோர் கூட்டணியின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

கட்சியின் தேர்தல் நடவடிக்கை பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்கவினால் கூட்டணியின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

ஊழல் மோசடிகளை அடியோடு வேரறுப்பதற்கான பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு, ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக வலுவான சட்டம், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல், வலுவான சர்வதேச தொடர்புகள், 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள், எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுதல், சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட யோசனைகள் ஐக்கிய மக்கள் கூட்டணி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, லக்‌ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலரும் இன்றைய கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஒரு வாரத்திற்கு முன்னர் நாமல் ராஜபக்சவை சந்தித்து மிகவும் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் நாமல் பவித்ரா வன்னியாராச்சித்திடம் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ந.ஶ்ரீகாந்தா அறிவித்துள்ளார். 

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையில் பொதுவான கொள்கையொன்றை அறிவிப்பதற்காக பிரதான அரசியல் தலைவர்களை ஒன்று திரட்டுவதற்காக சங்க ஒன்றியத்துக்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் அரசியல் செல்வாக்கு இல்லாத 5000 பிக்குகள் சங்க மாநாட்டை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய ஜன பலவேகய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தமது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் முன்வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது நாடாளுமன்ற மசோதாக்கள் பற்றி மக்கள் கேட்க விரும்பவில்லை. செலவினங்களை நிர்வகித்தல், பிள்ளைகளைப் படிக்க வைப்பது போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்கள் விரும்புகிறார்கள்,” என்றார்.

எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்றை அறிவிப்பதற்கு முக்கிய அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவர பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த அறிவிப்பை விடுத்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ, உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என பொஹொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாளை (07) அறிவிப்பு விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் இன்று மாலை தனது அதிருப்தியை செயலாளர் சாகர காரியவசத்திடம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“2024 ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகப் போட்டியிடமாட்டேன் என்று தெரிவிக்கிறேன். 

முதலில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக என்னை முன்மொழிந்த கட்சித் தலைமைக்கும், உங்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் வெற்றி பெறவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி 

தம்மிக்க பெரேரா (P.M.)

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளதால் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிகளின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதன்படி அடுத்த சில நாட்களில் பல இராஜாங்க அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, அவரும் எதிர்க்கட்சியில் அமர உள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd