web log free
December 23, 2024
kumar

kumar

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் பட்சத்தில், அது மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவையில் திருத்தம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் எம்.பி.க்களிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு புதிய எம்.பி.க்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் குழுவில் சஜபாவின் பல உறுப்பினர்களும் பொஹொட்டுவவைச் சேர்ந்த பலரும் சுயேச்சைக் குழுவின் பல உறுப்பினர்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தை காய்கறி மற்றும் உணவுத் தன்னிறைவு நிலைக்கு முன்னேற்றுவது குறித்த திட்டங்களை அமுல்படுத்த அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார். 

காய்கறிகளின் திடீர் விலையேற்றம் குறித்து விவசாயச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்களத் தலைவர் ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் வெற்று காணிகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். 

பிரதம செயலாளர், உள்ளூராட்சி செயலாளர், மாகாண சபை செயலாளர், வீதி செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் கல்வி செயலாளர் ஆகியோர் விவசாய அமைச்சின் தொழில்நுட்ப ஆதரவுடன் ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது நிறுவனங்களின் கீழ் விவசாய முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தை முதலாவது தன்னிறைவு பெற்ற மாகாணமாக மாற்றுவதுடன், உணவுப் பாதுகாப்பிற்கு ஏனைய மாகாணங்களுக்கும் உதவி செய்யும் நிலைக்கு முன்னேற்றுவது தனது நோக்கம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

அத்துரலி ரதன தேரரிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா தம்மிடம் தெரிவித்ததாக வணக்கத்துக்குரிய வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் ரதன தேரர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், இந்த சம்பவத்திற்கு ரதன தேரரே பொறுப்பு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பெலியஅத்த பிரதேசத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் உட்பட பல தரப்பினரின் உதவி பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உதவவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நாளை காலை முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது.

ஜனவரி மாத சம்பளத்துடன் வைத்தியர்களின் DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி வெளியிடப்பட்ட கடிதத்தை சுகாதார அமைச்சு இரத்துச் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (24) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக தெரிவித்ததை போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவு 35,000 ரூபாவை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இந்த புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ சங்கம் மேற்கொள்ளவுள்ளது. 

ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோது சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று சதி செய்து இம்மாத சம்பளத்தில் கொடுப்பனவை வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் டொக்டர் ஹரித அலுத் கே தெரிவித்துள்ளார்.

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணையில் போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அவரது மரணம் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாததன் அடிப்படையில் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக மின்சார கட்டணத்தை செலுத்தி வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் ஏழு கோடி மின்கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகமும் எவ்வித பாக்கியும் இன்றி மின்சார கட்டணத்தை செலுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அனைவருக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஞ்சன் ஜெயலால் என்ற நபரை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் தேரர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் T-56 போன்ற துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, முன்னுரிமை இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட சில இடமாற்ற சுழற்சிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அதனால் சம்பந்தப்பட்ட இடமாற்ற சுழற்சிகளில் உள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அரச சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd